ரயில் பயணம் அடிக்கடி செல்பவர்கள், குடும்பத்தோடு நீண்ட நாட்கள் விடுமுறைகாக செல்பவர்களுக்கு ஐஆர்சிடிசி, ரயில் முன்பதிவில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.  ஆதார் அட்டை இணைப்பு உள்ளிட்ட பல்வேறு அப்டேட்டுகளை கொண்டு வந்துள்ள ஐஆர்சிடிசி, அண்மையில், சென்று சேரும் இடத்தை குறிப்பிட வேண்டும் என்ற அம்சத்தை நீக்கியது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Aadhaar Update: உங்கள் மொழியில் ஆதார் அட்டையை புதுப்பிக்கலாம், வழிமுறைகள் இதோ


வாடிக்கையாளர்கள் சென்று சேரும் இடத்தை நிரப்பினால் மட்டுமே டிக்கெட் புக்காகும் என்ற நிலை இருந்து வந்த நிலையில், அதனை நீக்கியது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. இப்போது இன்னொரு புதிய அம்சத்தை ஐஆர்சிடிசி அறிமுகப்படுத்தியுள்ளது. அது என்னவென்றால், ஐஆர்சிடியில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் ஒரு மாதத்திற்கு 6 டிக்கெட்டுகளை மட்டுமே புக் செய்ய முடியும் என விதிமுறை அமலில் இருந்தது.


 ஆனால் இப்போது நீங்கள் ஒரு மாதத்திற்கு 12 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், உங்களின் ஆதார் அட்டையை ஐஆர்சிடிசியுடன் இணைக்க வேண்டும். 


ஆதார் அட்டையை இணைப்பது எப்படி?


1. ஆதார் அட்டையை இணைக்க அதிகாரப்பூர்வமாக irctc.co.in இணையளதளத்துக்கு செல்ல வேண்டும். 
2. உங்களின் ஐஆர்சிடிசி அக்கவுண்ட் ஐடி மற்றும் பாஸ்வேர்டை உள்ளிட்டு அக்கவுண்டுக்குள் நுழைய வேண்டும்.
3. மை அக்கவுண்ட் பக்கத்துக்கு சென்று 'ஆதார் KYC' என்பதைக் கிளிக் செய்யவும்.
4. அப்போது ஆதார் எண்ணை உள்ளிட்டு Send OTP' என்பதைக் கிளிக் செய்யவும்.
5. இப்போது உங்கள் ஆதார் அட்டையில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP வரும். இந்த OTP-ஐ உள்ளிட்டு சரிபார்க்கவும்.
6. ஆதார் தொடர்பான தகவல்களைப் ஒருமுறை செக் செய்த பிறகு கீழே உள்ள Verify என்பதைக் கிளிக் செய்யவும்.
7 இப்போது KYC புதுபிக்கப்பட்டிருக்கும். இதனைத் தொடர்ந்து நீங்கள் மாதத்துக்கு 12 டிக்கெட்டுகளை புக் செய்யலாம்.


மேலும் படிக்க | HDFC Bank வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் செய்தி: எஃப்டி வட்டி விகிதங்களின் மாற்றம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR