HDFC Bank வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் செய்தி: எஃப்டி வட்டி விகிதங்களின் மாற்றம்

HDFC Bank FD Rates: எச்டிஎஃப்சி வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் ஒரு நல்ல செய்தியை வழங்கியுள்ளது. சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு நிரந்தர வைப்புத் தொகைக்கான வட்டி விகிதத்தை வங்கி மீண்டும் உயர்த்தியுள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 20, 2022, 01:56 PM IST
  • எச்டிஎஃப்சி வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தியை அளித்துள்ளது.
  • வங்கி நிலையான வைப்புக்கான விகிதத்தை மாற்றியுள்ளது.
  • புதிய எஃப்டி வட்டி விகிதங்கள் 20 ஏப்ரல் 2022 முதல் அமலுக்கு வரும்.
HDFC Bank வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் செய்தி: எஃப்டி வட்டி விகிதங்களின் மாற்றம் title=

எச்டிஎஃப்சி வங்கி சமீபத்திய எஃப்டி வட்டி விகிதங்கள்: முன்னணி தனியார் துறை வங்கியான எச்டிஎஃப்சி, தனது வாடிக்கையாளர்களுக்கு, மீண்டும் ஒரு நல்ல செய்தியை வழங்கியுள்ளது. வங்கி மீண்டும் நிலையான வைப்புக்கான விகிதத்தை மாற்றியுள்ளது. புதிய கட்டணங்கள் ஏப்ரல் 20 முதல் அமலுக்கு வந்துள்ளன. புதிய விகிதங்கள் ரூ. 2 கோடிக்கு குறைவான எஃப்டி-களுக்கு பொருந்தும்.

இதுதான் புதிய வட்டி விகிதம்

வங்கியின் சார்பில், சாதாரண குடிமக்களுக்கு 7 முதல் 29 நாட்கள் வரையிலான எஃப்டி-களுக்கு 2.50 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இது தவிர, வங்கி 30 நாட்கள் முதல் 90 நாட்கள் வரையிலான எஃப்டி-களுக்கு 3% வட்டி அளிக்கிறது. புதிய மாற்றத்திற்குப் பிறகு, எச்டிஎஃப்சி வங்கி 91 நாட்கள் முதல் 6 மாதங்கள் வரையிலான நிலையான வைப்புகளுக்கு 3.50 வட்டி அளிக்கிறது.

அதிகபட்ச வட்டி விகிதம் 5.60 சதவீதம்

வங்கியின் இணையதளத்தின்படி, ஒரு நாள் முதல் இரண்டு ஆண்டுகள் வரை ஒரு வருடத்தில் முதிர்ச்சியடையும் எஃப்டி-களுக்கு 5.10 சதவீத வட்டி வழங்கப்படும். இரண்டு வருடங்கள் 1 நாள் முதல் மூன்று வருடங்களுக்கான எஃப்டி-களின் வட்டி விகிதம் 5.20 சதவீதம் ஆகும். மூன்று ஆண்டுகள் 1 நாள் முதல் ஐந்து ஆண்டுகள் வரையிலான எஃப்டி-களுக்கு 5.45 சதவீத வட்டி விகிதமும், ஐந்து ஆண்டுகள் 1 நாள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான எஃப்டி-களுக்கு 5.60 சதவீத வட்டியும் கிடைக்கும்.

மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு பம்பர் செய்தி, 13% டிஏ ஹைக் 

எஃப்டி வட்டி விகிதங்கள் 20 ஏப்ரல் 2022 முதல் அமலுக்கு வரும் 

7 முதல் 14 நாட்கள்: 2.50%
15 முதல் 29 நாட்கள்: 2.50%
30 முதல் 45 நாட்கள்: 3%
61 முதல் 90 நாட்கள்: 3%
91 நாட்கள் முதல் 6 மாதங்கள் வரை: 3.5%
6 மாதங்கள் 1 நாள் முதல் 9 மாதங்கள் வரை: 4.4%
9 மாதங்கள் 1 நாள் முதல் 1 வருடம் வரை: 4.40%
1 ஆண்டு 1 நாள் முதல் 2 ஆண்டுகள் வரை : 5.10%
2 ஆண்டுகள் 1 நாள் முதல் 3 ஆண்டுகள் வரை: 5.20%
3 ஆண்டுகள் 1 நாள் முதல் 5 ஆண்டுகள் வரை: 5.45%
5 ஆண்டுகள் 1 நாள் முதல் 10 ஆண்டுகள் வரை: 5.60%

மேலும் படிக்க | VISTARA வழங்கும் அசத்தல் சலுகை; இன்றே விமான டிக்கெட்டுகளை புக் செய்யவும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News