இந்தியன் ரயில் நிலையங்கள் மற்றும் இந்திய ரயில்களில் CCTV கேமராக்களை நிறுவ இந்திய ரயில்வே பெரிய டெண்டர் வெளியிட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சுமார் 1 லட்சம் CCTV கேமராக்களை நிறுவ டெண்டர் அடுத்த மாத இறுதிக்குள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. ஆதாரங்களில் இருந்து பெறப்பட்ட பிரத்யேக தகவல்களின்படி, தற்போது, ​​9 நிறுவனங்கள் இதற்கான போட்டியில் உள்ளன. இந்த நிறுவனங்களில் BEL அதாவது பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட், TCIL தொலைத்தொடர்பு ஆலோசகர் இந்தியா லிமிடெட், ITI மற்றும் HFCL ஆகியவை அடங்கும்.
 
இது தவிர, Sterlite, M2M மற்றும் மேட்ரிக்ஸ் போன்ற தனியார் நிறுவனங்களும் இணைந்துள்ளன. இந்த முழு திட்டமும் சுமார் 14 கோடி ரூபாய் செலவீட்டில் நிறைவேற்றப்படும் என தெரிகிறது மற்றும் மொத்தம் 9 நிறுவனங்களில் 4 நிதி ஏலங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. 


மும்பை உள்ளூர் ரயிலில் 'பெஸ்ட் ரேக்' நிறுவப்பட்டதை அடுத்து தற்போது மும்பை உள்ளூர் பெண்களின் பயணங்கள் மிகவும் பாதுகாப்பானதாகவும், வசதியானதாகவும் மாற்றம் கண்டுள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ரயிலின் ஒவ்வொரு பெட்டியிலும் CCTV கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன.
 
இந்த ரயில்களின் சிறப்பு என்னவென்றால், மேற்கு ரயில் பாதையில் CCTV கேமராக்களை நிறுவிய முதல் ஏசி அல்லாத உள்ளூர் ரயில் இதுவாகும். கூடுதலாக, ரயிலில் உள்ள அவசர சங்கிலியும், அவசர புஷ் பொத்தானாக மாற்றப்பட்டுள்ளது. 


இந்நிலையில் இவ்வாறான பயணத்தை நாடு முழுவதிலும் அளித்திட, இந்தியன் ரயில்வே அனைத்து ரயில்களிலும், ரயில் நிலையங்களிலும் CCTV  கேமிராக்களை பொறுத்திட திட்டமிட்டுள்ளது. 


இந்த திட்டமானது அடுத்த மாத இறுதிக்குள் ஒப்பந்த நிலையினை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறித்த 9 நிறுவனங்களில் 4 நிறுவனங்களுக்கு மட்டுமே இறுதி ஒப்பந்தம் வழங்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.