இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட வலைதளங்களின் பட்டியலில் ஆபாச வலைதளங்களை பின்னுக்கு தள்ளி, ஆதார் அட்டையின் அதிகாரபூர்வ வலைதளமான UIDAI முன்னேறியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னொரு காலத்தில், இந்தியாவில் அதிகப் பார்க்கப்பட்ட வலைதளங்களின் பட்டியலில் முதல் 5 இடங்களில் 3 இடங்களை ஆபாச வலைத்தளங்கள் பிடித்தன. தற்போது இந்த நிலையினை மாற்றிய பெருமை ஆதார் அட்டையே சேர்ந்துள்ளது.


உலக அளவில் 13-வது பிரபல வலைதளமாக இடம்பிடித்துள்ள Xvideos, இந்திய அளவில் 20 இடத்தினை பிடித்துள்ளது. ஆனால் இந்திய அளவில் பார்க்கையில் இந்த வலைதளத்தினை பின்னுக்கு தள்ளிய ஆதாரின் UIDAI ஆனது 15-வது இடத்தினை தக்கவைத்துக் கொண்டுள்ளது.



ஆபாச வீடியோக்களை இலவசமாக பயனர்களுக்கு அளிப்பதன் மூலம் உலக அளவில் மிகவும் பிரபலம் அடைந்த இந்த Xvideos ஆனது தற்போது இந்தியளவில் பின்னடைவை பெற்றுள்ளது. இந்த மாற்றம் ஆனது இந்திய மக்களிடையே உள்ள அந்த ஆர்வத்தினை குறைத்துவிட்டது என கருதிவிட முடியாது. இந்திய அரசால் ஆதார் கட்டாயமாக்கப் பட்டதாலும், கட்டாயமாக்கப்பட்ட ஆதாரினை பிழைகள் நிரப்பி கொடுத்ததாலும் தான் இந்த மாற்றம்.


ஆம்... எங்கே சென்றாலும் ஆதார், எதற்கு சென்றாலும் ஆதார் என்றாகிவிட்ட நிலையில் பெயரில் பிழை, முகவரியில் பிழை என கொடுத்தால்.... மக்கள் என்ன செய்வார்கள். தற்போது இதற்காக யாரிடத்திலும் சென்று முறையிட முடியாது, முடிந்தவரை அட்டையில் இருக்கும் பிழையினையாவது திருத்திக்கொள்வோம் என மக்கள் UIDAI தற்போது நாடி வருவதால் தான் இந்த மாற்றம் என கருத வேண்டும்!