யூ-டியூப் பார்த்து மனைவிக்கு கணவன் பிரசவம் பார்த்த விவகாரம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவன் பிரசவம் பார்த்ததில் குழந்தை இறந்தே பிறந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரசவித்த பெண்ணும் ஆபத்தான நிலையில் வேலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை (Treatment in government hospital) பெற்று வருகிறார். ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த நெடும்புலி கிராமத்தை சேர்ந்தவர் 34 வயது லோகநாதன். டிப்ளமோ படித்துவிட்டு வீட்டிலேயே மரச்செக்கு வைத்து எண்ணெய் வியாபாரம் செய்து வருகிறார். 


ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு லோகநாதனுக்கும், 28 வயது கோமதி என்ற பெண்ணிற்கும் திருமணம் நடைபெற்றது. நிறைமாத கர்ப்பிணியான கோமதிக்கு டிசம்பர் மாதம் 13ம் தேதி பிரசவம் நடக்கும் என, பரிசோதனைகளின் அடிப்படையில் மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.


ஆனால் குறிப்பிட்ட நாளன்று கோமதிக்கு பிரசவ வலி ஏற்படவில்லை. நேற்று பிற்பகல் 3 மணியளவில் கோமதிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.


பிரசவ வலி எடுத்த மனைவி கோமதியை லோகநாதன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், அக்கா கீதா உதவியுடன் யூ-டியூப் சேனலை பார்த்து பிரசவம் பார்த்துள்ளார். ஆண் குழந்தை பிறந்தாலும், அது இறந்தே பிறந்துள்ளது. பிரசவித்த கோமதிக்கு அதிகளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டதில் உடல்நிலை கவலைக்கிடமானது. 


Also Read | Pregnancy Alert: வீட்டில் சுயமாக பிரசவம் பார்த்து குழந்தையை இழந்த கர்ப்பிணி 


அதன்பிறகுதான், நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த கணவன் லோகநாதன், மனைவியையும், இறந்த குழந்தையையும் அருகில் உள்ள புன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளார்.  


அங்கு அவர்கள் கோமதிக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, உடனடியாக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தையையும் அங்கு கொண்டு சென்றனர். 


தற்போது மருத்துவமனையில் கோமதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. யூடியூப் மூலம் பிரசவம் பார்த்தது தொடர்பாக ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் மோகன் புகார் அளித்தார். 


அதன் அடிப்படையில் வழக்குப் பதிந்த நெமிலி போலீசார் கணவர் லோகநாதனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Also Read | யூ-டியூப் பார்த்து தனக்கு தானே பிரசவம் பார்த்து கொண்ட பிளஸ் 2 மாணவி!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR