சந்தையை கலக்க வருகிறது ரூ.10,000-க்கும் குறைவான அசத்தல் போன்: கசிந்த விவரங்கள் இதோ
Infinix Hot 12i: மூன்று மாடல்களின் வெளியீட்டு தேதிகள் நிறுவனத்தால் இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், இந்த மாடல்களில் ஒன்றான Hot 12i-ன் அம்சங்கள் மற்றும் மாடல் புகைப்படங்கள் கசிந்துள்ளன.
இன்ஃபினிக்ஸ் அதன் ஹாட் தொடரின் அடுத்த பதிப்பை வெளியிட தயாராக உள்ளது. கடந்த ஆண்டைப் போலவே, இந்த வரிசையில் ஹாட் 12, ஹாட் 12ஐ மற்றும் ஹாட் 12 ப்ளே ஆகிய மூன்று மாடல்கள் இருக்கும்.
மூன்று மாடல்களின் வெளியீட்டு தேதிகள் நிறுவனத்தால் இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், இந்த மாடல்களில் ஒன்றான Hot 12i-ன் அம்சங்கள் மற்றும் மாடல் புகைப்படங்கள் கசிந்துள்ளன. இன்ஃபினிக்ஸ் ஹாட் 12ஐ 6.6-இன்ச் டிஸ்ப்ளே, 13எம்பி கேமரா மற்றும் 5000mAh வலுவான பேட்டரியைக் கோண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இன்ஃபினிக்ஸ் ஹாட் 12ஐ-ன் விலை மற்றும் அம்சங்கள் பற்றி கசிந்துள்ள விவரங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
இந்தியாவில் இன்ஃபினிக்ஸ் ஹாட் 12ஐ-ன் விலை
கசிந்த படங்கள் மற்றும் அம்சங்களின்படி, இன்ஃபினிக்ஸ் ஹாட் 12 ஒரு நுழைவு-நிலை சாதனமாக இருக்கும் என தேரிகிறது. மேலும் இந்திய சந்தைகளில் இது சுமார் ரூ. 10,000-க்கு அறிமுகம் செய்யப்படலாம். இதன் விலை இதற்கு குறைவாகவும் இருக்கக்கூடும்.
இன்ஃபினிக்ஸ் ஹாட் 12ஐ விவரக்குறிப்புகள்
இன்ஃபினிக்ஸ் ஹாட் 12ஐ ஆனது 720×1612 தீர்மானம் கொண்ட 6.6-இன்ச் எச்டி + ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளேவுடன் வருகிறது. மீடியாடெக் ஹீலியோ ஏ22 சிப்செட் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் இது இணைக்கப்பட்டுள்ளது.
புகைப்படம் எடுப்பதற்கு, இந்த ஸ்மார்ட்போனில், 13எம்பி முதன்மை, 2எம்பி அல்ட்ராவைட் மற்றும் 2எம்பி மேக்ரோ அலகுகள் இருக்கும். முன்பக்க ஸ்னாப்பரின் தீர்மானம் 8எம்பி ஆக உள்ளது. இதில் ஃபிளாஷ் இருக்கும் என்று ஊகிக்கப்படுகின்றது.
இன்ஃபினிக்ஸ் ஹாட் 12ஐ: பேட்டரி
இந்த ஸ்மார்ட்போனில் பயனர்களுக்கு ஜி-சென்சார், ப்ராக்ஸிமிட்டி சென்சார், எல்-சென்சார் மற்றும் கைரேகை சென்சார் ஆகியவை கிடைக்கும். தொலைபேசியில் ஹெட்ஃபோன் ஜாக் உள்ளது. கீழே ஒரு யுஎஸ்பி-சி போர்ட் உள்ளது. பேட்டரியின் அளவு 5,000mAh ஆகும். ஆனால் சார்ஜிங் வேகம் பற்றி எதுவும் இன்னும் தெரிவியவில்லை.
அவுட் ஆஃப் தி பாக்ஸ் இன்ஃபினிக்ஸ் ஹாட் 12ஐ ஆனது ஆண்ட்ராய்டு 11 கோ பதிப்பில் பூட் ஆகும். மேலும் அதன் 2ஜிபி ரேமை மற்றொரு 2ஜிபி விர்ச்சுவல் ரேம் மூலம் விரிவாக்கலாம்.
மேலும் படிக்க | மொபைல் நெட்வொர்க் இல்லாதபோது என்ன செய்ய வேண்டும்? இதோ டிப்ஸ்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR