தற்போதுள்ள மொபைல் சந்தையில் ஒவ்வொரு நிறுவனமும், தங்களது வாடிக்கையாளர்களை கவரும் பொருட்டு தங்களது பொருட்களில் புதுமைகளை புகுத்திக்கொண்டே வருகிறது. உலகில் நாளுக்கு நாள் ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கை பல மடங்காக பெருகி வருகிறது, சிறுவர் தொடங்கி பெரியவர்கள் வரை பலரும் ஸ்மார்ட்போன் பயன்படுத்தி வருகின்றன. இந்த காலகட்டத்தில் ஸ்மார்ட்போன்கள் வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கமாக மாறியுள்ளன.
முன்னணி நிறுவங்களான ரெட்மி, ஓப்போ, விவோ போன்றவற்றை வாடிக்கையாளர்கள் அதிகளவில் வாங்குகின்றனர், இதனால் சந்தையில் இதன் விற்பனை அமோகமாக உள்ளது. Flipkart, Amazon போன்ற தளங்களிலும் இவை விற்கப்படுகிறது. தற்போது கிறிஸ்துமஸ், பொங்கல் போன்ற பண்டிகைகாலங்கள் வரிசைகட்டி நிற்பதால் ஒவ்வொரு மொபைல் நிறுவனமும் பிரத்யேகமான ஆபர்களை அறிவித்து வருகிறது.
தற்போதுஅசத்தலான அம்சங்களுடன் Infinix NOTE 11 மற்றும் MOTO G31 ஸ்மார்ட்போன்கள் சந்தையில் களமிறங்கியுள்ளன. இரண்டுமே கிட்டத்தட்ட ஒரே விலையில் இருப்பதால் எதை வாங்குவது என்று வாடிக்கையாளர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அவற்றின் முழுமையான விவரங்களை இங்கே காண்போம்.
Infinix NOTE 11 :
-6.7 இன்ச் FHD + AMOLED டிஸ்பிளே கொண்டுள்ளது.
-மூன்று கேமராக்களுடன் 50MP+2MP+AI கொண்டுள்ளது.
-முன்பக்க கேமரா 16 MP கொண்டுள்ளது.
-64GB ஸ்டோரேஜுடன், 4GB RAM கொண்டுள்ளது.
-இதன் விலை ரூ.11,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
MOTO G31 :
-6.4 இன்ச் FHD + AMOLED டிஸ்பிளே கொண்டுள்ளது.
-மூன்று கேமராக்களுடன் 50MP+8MP+2MP கொண்டுள்ளது.
-முன்பக்க கேமரா 13 MP கொண்டுள்ளது.
-128 GB ஸ்டோரேஜுடன், 6 GB RAM கொண்டுள்ளது.
-இதன் விலை ரூ.12,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ALSO READ | Amazon Bumper Offer; வெறும் 5 ஆயிருக்கு Vivoவின் 5G ஸ்மார்ட்போன்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR