ரூ 13,000 இருந்தால் போது செம ஸ்மார்ட் டிவி ரெடி
13,000 ரூபாய் பட்ஜெட்டில் ஸ்மார்ட் ட்வியை இன்பினிக்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
டிரான்சிஷன் குரூப் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய இன்பினிக்ஸ் 43 Y1 ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்திருக்கிறது. இந்தப் புதிய ஸ்மார்ட் டிவியானது 43 இன்ச் FHD LED ஸ்க்ரீன், 300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டிருக்கிறது. ஸ்மார்ட் டிவி என்ற போதிலும் இந்த மாடல் லினக்ஸ் ஓஎஸ்ஸை கொண்டிருக்கிறது.
இத்துடன் பிரைம் வீடியோ, சோனிலிவ், ஜீ5, ஈரோஸ் நவ் போன்ற முன்னணி ஒடிடி சேவைகள் டிவியுடன் பில்ட்-இன் செய்யப்பட்டுள்ளன. இதில் 20 வாட் பாக்ஸ் ஸ்பீக்கர்கள், டால்பி ஆடியோ போன்ற வசதிகளும் இருக்கின்றன. இத்துடன் ஏராளமான கனெக்ட்டிவிட்டி ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த டிவி ரிமோட்டில் யூட்யூப் மற்றும் பிரைம் வீடியோ போன்ற சேவைகளுக்கான ஹாட்-கீ உள்ளது.
இந்த டிவியில் 43 இன்ச் 1920x1080 பிக்சல் FHD டிஸ்ப்ளே குவாட் கோர் பிராசஸர் மாலி ஜி31 GPU 4 ஜிபி மெமரி லினக்ஸ் ஒஎஸ் யூடியூப், பிரைம் வீடியோ, ஜீ5, ஆஜ் டக், சோனி லிவ், இரோஸ் நௌ, ஹங்காமா, பிலெக்ஸ், யப் டிவி வைபை, 2x HDMI, 2x USB போர்ட்கள், 1 RF இன்புட், 1 AV இன்புட், 1 ஹெட்போன் ஜாக் 20 வாட் (2x10 வாட்) ஸ்பீக்கர்கள், டால்பி ஆடியோ இருக்கின்றன.
இன்பினிக்ஸ் 43 Y1 மாடலின் விலை இந்திய சந்தையில் ரூ. 13 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை விரைவில் ப்ளிப்கார்ட் தளத்தில் தொடங்கவிருக்கிறது. குறைந்த பட்ஜெட்டில் தயார் செய்யப்பட்டிருக்கும் இந்த ஸ்மார்ட் டிவியானது இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | Flipkart Diwali Sale: iPhone 13-ல் இதுவரை இல்லாத பம்பர் தள்ளுபடி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ