மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்துவரும் சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம் செயலியில் திடீரென்று நேற்று கோளாறு ஏற்பட்டு பயனர்களுக்கு அதிருப்தி அளித்தது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் இதேபோல உலகெங்கிலும் மெட்டாவுக்கு சொந்தமான வாட்ஸ் அப் சேவையில் சில மணி நேரங்கள் சிக்கல் ஏற்பட்டு பின்னர் சரிசெய்யப்பட்டு வாட்ஸ் அப் இயல்பு நிலைக்கு திரும்பியது.  இந்நிலையில் மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமான மற்றொரு செயலியான இன்ஸ்டாகிராமிலும் இதுபோன்று கோளாறு ஏற்பட்டுள்ளது.  உலகெங்கிலும் இருந்து இன்ஸ்டாகிராம் பயனர்கள் பலர் இன்ஸ்டாகிராம் கோளாறு குறித்து புகாரளித்து இருக்கின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | வாட்ஸ் அப்பில் அறிமுகமாகியுள்ள 5 புதிய அம்சங்கள் பற்றி தெரியுமா?


சில மணி நேரங்களுக்கு இன்ஸ்டாகிராம் செயலிழந்தது, பலரின் கணக்குகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கிறது.  ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடங்கங்களில் மக்கள் பலரும் தங்களது இன்ஸ்டாகிராம் கணக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டு விட்டதாகவும், சிலர் தங்களால் இன்ஸ்டாகிராமை இயக்கமுடியவில்லை என்றும் தெரிவித்தனர்.  இந்த சிக்கலை இன்ஸ்டாகிராம் ஒப்புக்கொண்டுள்ளது, மேலும் அந்த சிக்கலை சரிசெய்து வருவதாகவும் கூறியுள்ளது.  இதுகுறித்து இன்ஸ்டாகிராம் அதன் ட்வீட்டில் 'சிலருக்கு இன்ஸ்டாகிராம் கணக்கை அணுகுவதில் சிக்கல் இருப்பதை நாங்கள் அறிவோம், நாங்கள் அதை ஆராய்ந்து வருகிறோம், சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்' என்று தெரிவித்துள்ளது.



பல இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு உங்களது கணக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டு விட்டதாகவும் செய்திகள் அனுப்பப்பட்டு இருக்கிறது, இதைப்பற்றி பயனர்கள் கவலைப்பட தேவையில்லை என்று இன்ஸ்டாகிராம் தெரிவித்துள்ளது.  இன்ஸ்டாகிராம் பயனர்கள் பலரது கணக்குகளிலும் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை குறைந்து இருப்பதாகவும் சில புகார்கள் எழுந்துள்ளது.  இன்ஸ்டாகிராமில் அதிக பின்தொடர்பவர்களை வைத்திருந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ 2 மில்லியன்  பின்தொடர்பவர்களை இழந்துள்ளதாக கூறப்படுகிறது.  தற்போது இன்ஸ்டாகிராமில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகள் சரிசெய்யப்பட்டு பழையபடி இன்ஸ்டாகிராம் செயலுக்கு வந்துவிட்டது.


மேலும் படிக்க | இனி ஸ்டோரேஜ் GBயில் இல்லை TBயில்....புதிய ஸ்மார்ட்ஃபோன் அறிமுகம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ