இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதில் சில சிக்கல்களும் இருக்கின்றன. இலவசமாக பதிவிறக்கம் செய்து, யார் வேண்டுமானாலும், என்ன கன்டென்ட் வேண்டுமானாலும் பதிவு செய்யலாம் என்றிருப்பது, பதின்பருவத்தினருக்கு ஆபத்தாக உள்ளது. குறிப்பாக, பதின்பருவ கன்டென்டுகளை அனைவரும் பார்க்கக்கூடிய சூழல்களும் இருக்கின்றன. இது வளரும் குழந்தைகளிடையே தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை என்பதால், இதனைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற குரல்கள் எழுவதும் வாடிக்கையாக உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | அழைப்பை மேற்கொள்ள ஸ்மார்ட்போன் தேவையில்லை! இந்த 'ஸ்மார்ட்' கண்ணாடிகள் போதும்


பேஸ்புக் சொந்தமான வீடியோ தளம் இன்ஸ்டாகிராம் இதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. இருப்பினும், எதிர்பார்த்த அளவுக்கான முன்னேற்றம் மற்றும் ரிசல்டுகள் கிடைக்கவில்லை. இதனைக் கருத்தில்க் கொண்ட நிறுவனம் புதிய டெக்னாலஜியை தேடிக் கொண்டிருந்தது. இப்போது அந்த கனவு நனவாகியுள்ளது. அதாவது, புகைப்படம் மற்றும் வீடியோவை வைத்தே யூசர்களின் வயதைக் கணக்கிடும் புதிய டெக்னாலஜியை இன்ஸ்டாகிராம் நடைமுறைக்கு கொண்டு வர உள்ளது. 


இது குறித்து இன்ஸ்டாகிராம் தெரிவித்துள்ள விளக்கத்தில் Yoti என்ற தொழில்நுட்பம் மூலம் யூசர்களின் வயதைக் கணக்கிட முடியும் எனக் கூறியுள்ளது. யூசர்கள் தங்களின் செல்பி வீடியோக்களை பதிவேற்றம் செய்தால், யோடி தொழில்நுட்பம் மூலம் யூசர்களின் வயதைக் கணக்கிட்டு அதன்மூலம் கன்டென்டுகளை தானாகவே ரெஸ்டிரிக்ஷன் செய்யும் எனக் கூறியுள்ளது. இதன்மூலம் பதின்பருவ கன்டென்டுகளை 18 வயதுக்கும் குறைவானவர்கள் பார்ப்பதை பெருமளவு தடுக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது. யூசர்களின் செல்பி வீடியோ  மூலம் எடுக்கும் புகைப்படங்கள் வயதை சரிபார்த்தவுடன் அது தொடர்பான புகைப்பட தகவல்கள் மெட்டா மற்றும் யோடி தொழில்நுட்பத்தில் இருந்து நீக்கப்பட்டுவிடும் என்றும் கூறியுள்ளது.



இந்த அம்சம் புரட்சிகரமானதாகவும், சூப்பரான ஐடியாவாக தோன்றினாலும் தனிநபர் உரிமையை மீறும் செயலாக இருக்கும் என்ற எச்சரிக்கையும் எழுந்துள்ளது. யூசர்களின் தனிப்பட்ட தகவல்களை சேமிப்பதன் மூலம் பல விளைவுகள் ஏற்படவும், பாதுகாப்பு அச்சுறுத்தல் உருவாகவும் வாய்ப்பு இருப்பதாக டெக் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இன்ஸ்டாகிராமின் புதிய அம்சம் அமெரிக்காவில் சோதனை முறையில் கொண்டு வரப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | இனி டெலிகிராம் பயன்படுத்த கட்டணம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR