அழைப்பை மேற்கொள்ள ஸ்மார்ட்போன் தேவையில்லை! இந்த 'ஸ்மார்ட்' கண்ணாடிகள் போதும்

ஸ்மார்ட்போன்களில் இருக்கும் பல அம்சங்களுடம் மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் கண்ணாடிகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 24, 2022, 10:05 AM IST
  • மார்க்கெட்டில் அறிமுகமாகியிருக்கும் ஸ்மார்ட் கண்ணாடி
  • தொலைபேசி வேலைகளை கண்ணாடி செய்யும்
  • மிக குறைந்த விலையில் கிடைப்பதால் வாடிக்கையாளர்கள் ஆர்வம்
அழைப்பை மேற்கொள்ள ஸ்மார்ட்போன் தேவையில்லை! இந்த 'ஸ்மார்ட்' கண்ணாடிகள் போதும் title=

Noise i1 Smart Glass: கேஜெட் எனப்படும் மின்னணு சாதனங்கள் நிறைத்த உலகமாக மாறிவிட்டது. ஸ்மார்ட்போன்கள் மற்றும் வாட்சுகள் என அனைத்திலும் நினைத்து பார்க்க முடியாத புத்தம் புதிய அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அவை நம் வாழ்க்கை முறையை எளிமையாக்குவதுடன், சொகுசாகவும் வைத்திருக்க உதவுகின்றன. 

குறிப்பாக இப்போது மார்கெட்டில் அறிமுகமாகியிருக்கும் கண்ணாடி ஒன்று, ஸ்மார்ட்போன் செய்யும் வேலையை செய்யும் என்றால் உங்களால் நம்ப முடியுமா?. ஆனால் அது உண்மைதான். குளிர்ச்சியான அம்சங்களுடன் கூடிய ஸ்மார்ட் கண்ணாடி ஒன்று மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | இனி டெலிகிராம் பயன்படுத்த கட்டணம்!

ஸ்மார்ட் கண்ணாடிகள் அறிமுகம்

Noise நிறுவனம் Noise i1 Smart Glass என்ற இந்த புதிய ஸ்மார்ட் கண்ணாடியை அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்மார்ட்போனில் இருக்கும் பல அம்சங்களுடன் கூடிய இந்தக் கண்ணாடி, 5,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. Noise நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து, இந்தக் கண்ணாடியை நீங்கள் வாங்க விரும்பினால் ஆர்டர் செய்து வாங்கலாம். 
 
Noise கண்ணாடியின் ஸ்பெஷல் 

Noise i1 ஸ்மார்ட் கண்ணாடிகள் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன. இந்த ஸ்மார்ட் கண்ணாடிகள் மேக்னெடிக் சார்ஜிங் போன்ற பல அம்சங்களைக் கொண்டுள்ளன. மல்டிஃபங்க்ஸ்னல் டச் கன்ட்ரோல்கள் மூலம் நீங்கள் எளிதாக அழைப்புகளைப் பெறலாம். நீங்கள் இசையை கட்டுப்படுத்தலாம். அதனுடன் வாய்ஸ் அசிஸ்டென்ஸையும் இயக்கலாம். 

மேலும் படிக்க | மிகவும் மலிவான விலையில் 5G ஐபோன், விலையே இவ்வளவு தானா

ஸ்மார்ட் கண்ணாடிகளின் சிறப்பம்சங்கள்
 
Noise i1 ஸ்மார்ட் கிளாஸ் புளூடூத் பதிப்பு 5.1-ல் வேலை செய்கிறது. சிறந்த அம்சங்களைக் கொண்ட இந்த ஸ்மார்ட் கண்ணாடிகளில் வழங்கப்பட்டுள்ள நீல ஒளி பிளிட்ரேஷன் (filtration) வெளிப்படையான லென்ஸ்கள் கண்களை கஷ்டப்படுத்தாது. ஆபத்தான புற ஊதா கதிர்களில் இருந்து பாதுகாக்கும். இது கண் எரிச்சலை ஏற்படுத்தாது. இந்த கண்ணாடிகள் வாட்டர் ப்ரூஃப் கொண்டிருக்கிறது. நாய்ஸ் i1 ஸ்மார்ட் கண்ணாடிகளை ஒரு முறை சார்ஜ் செய்தால் ஒன்பது மணி நேரம் பயன்படுத்தலாம்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News