இனி டெலிகிராம் பயன்படுத்த கட்டணம்!

டெலிகிராம் பிரீமியம் பயனர்களுக்கு 1000 சேனல்கள் வரை சேரவும், 20 பப்ளிக் லின்குகளை உருவாக்கவும் அனுமதிக்கிறது.  

Written by - RK Spark | Last Updated : Jun 23, 2022, 02:47 PM IST
  • இந்தியாவில் பிரீமியம் தொகை ரூ. 460 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • டெலிகிராம் பிரீமியம் பயனர்களுக்கு 1000 சேனல்கள் வரை சேரலாம்.
  • பிரீமியம் பயனர்கள் டெலிகிராமை ஆதரிப்பதாகக் காட்டும் பேட்ஜையும் பெறுவார்கள்
இனி டெலிகிராம் பயன்படுத்த கட்டணம்!  title=

டெலிகிராம் பிரீமியம் உலகளவில் தொடங்கப்பட்டுள்ளது. உங்கள் ஸ்மார்ட்போனில் இந்த செயலியை அப்டேட் செய்தால், இந்த செயலியில் உள்ள 'பிரீமியம்' திட்டத்தைப் பார்க்க முடியும்.  இந்த செயலுக்கு இந்தியாவில் பிரீமியம் தொகை ரூ. 460 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது,  மேலும் இது பல புதிய அம்சங்களை கொண்டு வருவதோடு, பயனர்கள் பெரிய ஃபைல்களை அனுப்புவதற்கும், அதிக எண்ணிக்கையிலான சேனல்களில் சேர்வதற்கும் ஏற்ற வகையில் மேம்படுத்தப்பட்ட திறன்களை வழங்கும்.  டெலிகிராம் பிரீமியம் பயனர்களுக்கு 1000 சேனல்கள் வரை சேரவும், 20 பப்ளிக் லின்குகளை உருவாக்கவும் மற்றும் நான்கு கணக்குகளை நான்கு வெவ்வேறு மொபைல் எண்களுடன் இணைக்கும் திறனை வழங்கும். 

மேலும் படிக்க | Free 4G Jiophone: இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 'ஜியோ போன்' இலவசம்

மேலும் இதுவரையில் பயனர்கள் 200 GIFகள் வரை மட்டுமே சேமித்துக்கொண்டிருந்த நிலையில் இனிமேல் 400 GIFகள் வரை சேமிக்கும் திறன் போன்ற பல விஷயங்களை தருகின்றன. ஃபைல்களை பதிவேற்றக்கூடிய  அளவு 2ஜிபியிலிருந்து 4ஜிபியாக அதிகரிக்கப்பட இருக்கிறது.  மேலும், பயனர்கள் எந்த இன்கமிங்க் ஆடியோ மெசேஜ்களின் டிரான்ஸ்கிரிப்டைப் படிக்கும் திறனைப் பெறுவார்கள்.  டெலிகிராம் சில நேரங்களில் விளம்பரங்களைக் காண்பிக்கும், இப்போது பொது சேனல்களில் இனி விளம்பரங்கள் இருக்காது.  பிரீமியம் ஸ்டிக்கர்கள் மற்றும் பலவற்றையும் பயனர்கள் அணுகலாம்.

பிரீமியம் பயனர்கள் டெலிகிராமை ஆதரிப்பதாகக் காட்டும் பேட்ஜையும் பெறுவார்கள்.  பிரீமியம் பயன்பாட்டு ஐகான்களும் இருக்கும், பயனர்கள் தங்கள் விருப்பப்படி தேர்வு செய்யலாம்.  உங்கள் ஸ்மார்ட்போனில் செயலையே டவுன்லோடு செய்து, உங்கள் தொலைபேசி எண்ணுடன் லாக் இன் செய்து, செட்டிங்கிற்கு சென்று, பின்னர் டெலிகிராம் பிரீமியத்தைக் கண்டறிவதன் மூலம் டெலிகிராம் பிரீமியம் பற்றி மேலும் அறியலாம்.  தற்போது இருக்கும் அனைத்து அம்சங்களும் இன்னும் இலவசமாகக் கிடைக்கும்.

மேலும் படிக்க | வாட்சப்பில் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் DP-யை மறைப்பது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News