தள்ளுபடி விலையில் ஐபோன் 12! இன்றே முந்துங்கள்!
ஆப்பிள் ஐபோன்12-க்கு 21 சதவீதம் வரை தள்ளுபடி வழங்குவதாக அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஐபோன் வாங்குபவர்களுக்கு இது ஒரு சிறந்த நேரமாக உள்ளது. அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் 21 சதவீதம் தள்ளுபடி வழங்குவதாக அசத்தலான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இவை நேரடியாக தள்ளுபடி செய்வதை விட எக்ஸ்சேஞ் மற்றும் கார்டுகளை பயன்படுத்துவதற்கு அதிகமான சலுகைகளை வழங்குகிறது. இதன் மூலம் நீங்கள் மொபைலை அமேசான்-ல் ரூ.37049க்கும், பிளிப்கார்ட்-ல் ரூ.36499க்கும் வாங்கமுடியும்.
மேலும் படிக்க | Redmi Note -ன் புதிய 4ஜி, 5ஜி ஸ்மார்ட்போன்கள்...! சிறப்பம்சம், விலை பட்டியல் இதோ
பிளிப்கார்ட் தளத்தில் ரூ.65,900க்கு விற்கப்படும் ஆப்பிள் ஐபோன் 12 (64GB, BLACK) 21 சதவீத தள்ளுபடியுடன் ரூ.51,999க்கு விற்கப்படுகிறது. இந்த தள்ளுபடி மூலம் உங்களால் ரூ.13,901 ஐ சேமிக்க முடியும். கூப்பன்கள் மூலம் இன்னும் குறைந்த விலையில் இவற்றை வாங்க இயலும், ஆக்ஸிஸ் வாங்கி கிரெடிட் கார்டு பயனாளர்களுக்கு 5 சதவீதம் கேஷ்பேக் ஆஃபர் வழங்கப்படுகிறது. மற்ற வங்கி பயனாளர்களுக்கு ரூ.200 வரை தள்ளுபடி மற்றும் சிட்டி வங்கி கிரெடிட் கார்டுகளை 10 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
எக்ஸ்சேஜ் செய்வதன் மூலம் இந்த மொபைலுக்கு ரூ.15,500 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. சரியான pincode ஐ உள்ளிடுவதன் மூலம் உங்கள் பகுதியில் எக்ஸ்சேஞ் வசதி உள்ளதா என்பதை சரிபார்க்க முடியும். மேலும் எக்ஸ்சேஞ் செய்யப்படும் மாடல்களின் தரத்தை பொறுத்து விலை குறைக்கப்படும். அதேபோல அமேசான் தளத்தில் ரூ.65,900க்கு விற்கப்படும் ஆப்பிள் ஐபோன் 12 (64GB, BLACK) 21 சதவீத தள்ளுபடியுடன் ரூ.51,999க்கு விற்கப்படுகிறது. பிளிப்கார்ட்-ஐ போலவே இதிலும் தள்ளுபடி மூலம் உங்களால் ரூ.13,901 ஐ சேமிக்க முடியும்.
வாங்கப்படும் மொபைல்களின் நிறங்களை பொறுத்து விலையில் மாறுபாடு ஏற்படும். எக்ஸ்சேஞ் மூலம் இன்னும் கூடுதல் தள்ளுபடி விலையில் இவற்றை வாங்க முடியும். எக்ஸ்சேஞ் மூலம் ஐபோன் 12க்கு ரூ.14,950 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. பரோடா கிரெடிட் கார்டுக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
மேலும் படிக்க | ப்ளிப்கார்ட்டில் ரூ.499-க்கு Samsung 5G ஸ்மார்ட்போன்..!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR