ப்ளிப்கார்ட்டில் ரூ.499-க்கு Samsung 5G ஸ்மார்ட்போன்..!

Flipkart Mobiles Bonanza Sale 2022 விற்பனையில் சாம்சங்கின் 5G ஸ்மார்ட்ஃபோனை வெறும் 499 ரூபாய்க்கு வாங்கலாம். 

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 2, 2023, 02:32 PM IST
  • பிளிக்கார்ட்டில் மொபைல் போனசா விற்பனை
  • காதலர் தினம் வரை ஸ்மார்ட்போன்களுக்கு ஆஃபர்
  • நம்பமுடியாத வகையில் ஆஃபர்கள் அறிவிப்பு
ப்ளிப்கார்ட்டில் ரூ.499-க்கு Samsung 5G ஸ்மார்ட்போன்..!  title=

பிளிப்கார்ட் மொபைல் போனசா 2022 மெகா விற்பனையை தொடங்கியுள்ளது. காதலர் தினம் வரை இருக்கும் மெகா விற்பனையில் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ​​5G ஸ்மார்ட்போன்களைக் கூட நீங்கள் சலுகைகளுடன் மலிவான விலைக்கு வாங்க முடியும். 

Samsung Galaxy F42 5G ஸ்மார்ட்போனை வெறும் 499 ரூபாய்க்கு இந்த மெகா விற்பனையில் வாடிக்கையாளர்கள் வாங்க முடியும்.

மேலும் படிக்க | வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் ஏர்டெல்..!

சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன்

Samsung Galaxy F42 5G 128GB வேரியண்ட் ஸ்மார்ட்போனின் விலை ரூ.23,999. இந்த மெகா விற்பனையில் இந்த ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலையில் ரூ.20,999-க்கு கிடைக்கிறது. அதாவது போனில் 3 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன் பிறகு வங்கி மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளும் உள்ளன. இதன் காரணமாக போனின் விலை கணிசமாகக் குறையும்.

வங்கி வழங்கும் சலுகை என்ன? 

நீங்கள் பணம் செலுத்துவதற்கு ஏதேனும் டெபிட் அல்லது கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால், உங்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி கிடைக்கும். இதன் மூலம் போனின் விலை ரூ.15,999-க்கு வாங்கலாம். இதுமட்டுமில்லாமல் எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் உண்டு.

எக்ஸ்சேஞ்ச்

Samsung Galaxy F42 5G - ஸ்மார்ட்போனை எக்ஸ்சேஞ்ச் மூலம் வாங்க விரும்பினால் அதிகபட்சம் 15,500 ரூபாய் வரை தள்ளுபடி கிடைக்க வாய்ப்புகள் உண்டு. இதில் இருக்கும் ஒரே கண்டிஷன் உங்கள் பழைய போனின் நன்றாகவும், லேட்டஸ்ட் மாடலாகவும் இருக்க வேண்டும். அப்போது மட்டுமே ரூ.15,500 தள்ளுபடி கிடைக்கும். இதன் மூலம் நீங்கள் ரூ.4990க்கு சாம்சங்க் Galaxy F42 5G ஸ்மார்ட்போனை வாங்கலாம். இவைதவிர, CITI டெபிட் அல்லது கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால், உடனடியாக ரூ.750 தள்ளுபடி கிடைக்கும். 

மேலும்படிக்க | Cheapest Bikes: நாட்டின் மிக மலிவான, சூப்பர் மைலேஜ் கொண்ட டாப் பைக்குகள் இவைதான்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News