செப்டம்பர் 7: iPhone 14, AirPods Pro 2, Apple Watch Series 8 அறிமுகப்படுத்தப்படும்
2022 ஆம் ஆண்டின் பிரமாண்ட நிகழ்வு இந்த வாரம் நடக்கிறது. ஐபோன் 14 தொடர், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8, ஏர்போட்ஸ் ப்ரோ 2 ஃபார் அவுட் நிகழ்வின் போது அறிமுகப்படுத்தும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
Apple Far Out 2022 நிகழ்வு இன்னும் சில நாட்களில் உள்ள நிலையில், அனைவரின் கவனம் ஆப்பிள் நிறுவனத்தின் மீது உள்ளது. ஐபோனின் அடுத்த சீரிஸ் iPhone 14 மாடலின் விலை மற்றும் அதன் அம்சம் எப்படி இருக்கும் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஐபோன் 14 உடன், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8, ஏர்போட்ஸ் ப்ரோ 2 உட்பட பலவற்றையும் செப்டம்பர் 7 ஆம் தேதி நடைபெறும் ஃபார் அவுட் நிகழ்வின் போது ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அதாவது iPhone 14, iPhone 14 Max, iPhone 14 Pro and iPhone 14 Pro Max ஆகிய மாடல்கள் அறிமுகம் செய்யப்படும். ஐபோன் 14 சீரிஸ் வெளியானதும், ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் மினி மாடலை நிறுத்தவுள்ளது.
iPhone 14 Pro மாடலின் விலை $1099 எனவும், iPhone 14 Pro Max மடலின் விலை $1199 ஆக இருக்கும் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஐபோன் 14 விலை சுமார் $899 மற்றும் iPhone 14 Max விலை $999 ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் ஐபோன் 14 மாடலின் விலை கொஞ்சம் அதிகமாக இருக்கும் எனக் கூறப்பட்டது. ஆனால் தற்போது வெளியாகிய தகவல்களின் அடிப்படையில், புதிய iPhone 14 மாடல்களின் விலையானது, முந்தைய iPhone 13 சீரிஸ் மாடல்களை விட குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இது ஐபோன் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி என்றாலும், இந்த தகவல்களை ஆப்பிள் நிறுவனம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே செப்டம்பர் 7 ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு தான் ஐபோன் 14 மாடலின் விலை அதிகாரப்பூர்வமாக தெரியவரும்.
மேலும் படிக்க: ஆப்பிள் ஐபோன் 14-ல் இவ்வளவு புதிய சிறப்பம்சங்கள் இருக்கா?
iPhone 14-ன் முன்பக்க கேமரா சிறந்த தரத்தில் இருக்கும், ஐபோன் 14 சீரிஸில் உள்ள செல்ஃபி கேமரா, தற்போதைய ஐபோன் 13-ன் ƒ/2.2 aperture ஒப்பிடும்போது, ஆட்டோஃபோகஸ் திறன் மற்றும் பரந்த ƒ/1.9 aperture கொண்ட அட்டகாசமான கேமராவாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
Appl AirPods Pro 2 அறிமுகம்:
ஆப்பிள் ஃபார் அவுட் நிகழ்வின் போது, ஆப்பிள் ஏர்போட்ஸ் 2 ப்ரோ என அழைக்கப்படும் புதிய ஏர்போட்களை ஆப்பிள் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்திய கசிவின்படி, வரவிருக்கும் ஏர்போட்ஸ் ப்ரோ 2 மாலில் H1 processor, லாஸ்லெஸ் ஆடியோ கோடெக் (ALAC) ஆதரவு, இன்-இயர் விங் டிப் டிசைன் மற்றும் பல மேம்பாட்டுடன் வரும் என எதிர் பார்க்க்கப்படுகிறது. புதிய ஏர்போட்கள் Apple’s Find My App செயலியை பயன்படுத்தி தேடும் போது ஒலியை வெளியிடும் சார்ஜிங் கேஸுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்பிள் வாட்ச் 8 சீரிஸ் அறிமுகம்:
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8, வாட்ச் ப்ரோ, வாட்ச் எஸ்இ அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஆப்பிள் வாட்ச் எஸ்இ 2 எனப்படும் மலிவு விலையில் வாட்ச் ஒன்றும் வரும் என்று சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க: Smart Phone Battery: ஸ்மார்ட்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க ‘சில’ டிப்ஸ்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ