Smart Phone Battery: ஸ்மார்ட்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க ‘சில’ டிப்ஸ்!

ஸ்மார்ட் போன் வாங்கி சுமார் 6 -7 மாதங்கள் பேட்டரியின் செயல்திறன் சிறப்பாகவே இருக்கும். ஆனால், படிப்படியாக குறைவது நம்மை ஏமாற்றமடைய செய்கிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 4, 2022, 06:02 PM IST
  • புதிதாக ஸ்மார்ட்போன் வாங்கும் வாங்கும் போது பல அம்சங்களில் கவனம் செலுத்துகிறோம்.
  • பேட்டரி மிக வேகமாக தீர்ந்து நம்மை நெருக்கடியில் தள்ளும்.
  • பேட்டரி பிரச்சனையை பலரும் எதிர்கொள்கின்றனர்.
Smart Phone Battery: ஸ்மார்ட்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க ‘சில’ டிப்ஸ்! title=

ஸ்மார்ட் போன்கள் இன்றி நம்மால் ஒருநாள் கூட இருக்க முடியாது என்ற நிலை தான் தற்போது உள்ளது. புதிதாக ஸ்மார்ட்போன் வாங்கும் வாங்கும் போது பல அம்சங்களில் கவனம் செலுத்துகிறோம். அதில் ஒன்று பேட்டரி ஆயுள் அதாவது, ஒரு முறை சார்ஜ் செய்தால் எத்தனை நேரம் நீடிக்கும் என்ற அம்சத்தின் மீது நிச்சயம் கவனம் செலுத்துவோம். ஸ்மார்ட் போன் வாங்கி சுமார் 6 -7 மாதங்கள் பேட்டரியின் செயல்திறன் சிறப்பாகவே இருக்கும். ஆனால், படிப்படியாக குறைவது நம்மை ஏமாற்றமடைய செய்கிறது. சிறந்த பேட்டரி ஆப்ஷனுடன் கூடிய போனை வாங்கியும் கூட, அதன் பேட்டரி மிக வேகமாக தீர்ந்து நம்மை நெருக்கடியில் தள்ளும். இந்த பிரச்சனையை பலரும் எதிர்கொள்கின்றனர். உங்கள் ஸ்மார்ட் போனின் பேட்டரி ஆயுளை அதிகரிக்க சில எளிய டிப்ஸ்களை பின்பற்றுவது மிகவும் பயன் தரும்

ஸ்மார்ட் போன் பிராசஸர்

நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனில் இணையத்தில் சர்ஃபிங் செய்கிறீர்கள் என்றால், உங்கள் தொலைபேசியின் செயலி முழு வேகத்தில் வேலை செய்ய வேண்டிய அவசியமில்லை. உங்கள் தொலைபேசியின் அமைப்புகளில் உள்ள பேட்டரி ஆப்ஷனுக்கு சென்று, 'Enhanced Processing' ஆப்ஷனை ஆஃப் செய்யவும்.

மேலும் படிக்க | Jio Recharge Plan: இரண்டு மாத வேலிடிட்டியில் புதிய பிளானை கொண்டுவந்திருக்கும் ஜியோ

நோடிபிகேஷனை நிர்வகிக்கவும்

உங்கள் ஸ்மார்ட்போனில் பேஸ்புக், யூடியூப் மற்றும் இதுபோன்ற பிற செயலிகளில் இருந்து வரும் புஷ் நோடிபிகேஷன்கள், அதிக பேட்டரியை சாப்பிட்டு விடும். செட்டிங்ஸ் சென்று, நீங்கள் அதிகம் பயன்படுத்தாத செயலிகளின் புஷ் நோடிபிகேஷனை ஆப் செய்து பேட்டரியைச் சேமிக்கவும்.

Wifi ஆஃப் செய்தல்

Wifi பயன்படுத்துவது உங்கள் மொபைல் டேட்டாவைச் சேமிக்கிறது. ஆனால் போனின் பேட்டரி மிகவும் வீணாகிறது. வைபையை ஆனில் வைத்திருந்தால், பேட்டரி விரைவாக ட்ரெயின் ஆகும், எனவே தேவைப்படும் போது மட்டும் வைபை ஆப்ஷனை ஆன் செய்யவும், மீதமுள்ள நேரத்தில் அதை ஆஃப் செய்யவும்.

செயலிகளை முழுமையாக ஆஃப் செய்யவும்

கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பை உபயோகித்த பிறகு ஷட் டவுன் செய்வது போல, உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள ஆப்ஸ்களை பயன்படுத்திய பிறகு முழுமையாக மூடிவிடவும். செயலிகள் பின்புலத்தில் கூட இயங்கிக் கொண்டே இருப்பதால், ஃபோனின் பேட்டரியை அவை சாப்பிடுகின்றன.

செயலிகளின் அப்டேட்

அதே போன்று, உங்கள் செல்போனில் உள்ள தேவையற்ற செயலிகளை டெலிட் செய்வது சிறந்தது. சில செயலிகளை நாம் பயன்படுத்தவில்லை என்றாலும், இன்டர்நெட் மூலம் இயங்கிக்கொண்டே இருக்கும். அதனால் பேட்டரி சீக்கிரம் தீர்ந்து போக வாய்ப்புள்ளது. அதனால் தேவையான பயன்படுத்தக்கூடிய செயலிகளை மட்டுமே வைத்துக் கொள்வது நல்லது.

பவர் சேவிங் மோடை பயன்படுத்தவும்

உங்கள் ஸ்மார்ட்போனின் பேட்டரி வேகமாக ட்ரையின் ஆகிய நிலையில், பேட்டரியை சேமிக்க விரும்பினால், ஸ்மார்ட்போனில் கொடுக்கப்பட்டுள்ள பவர் சேவிங் மோடை (power saving mode) பயன்படுத்தவும். இது தொலைபேசியின் பேட்டரியை சேமிக்கும்.

மேலும் படிக்க | Scooter Free: வாடிக்கையாளர்களுக்கு எலக்டிரிக் ஸ்கூட்டர் இலவசம்; அதிரடியாக அறிவித்த கம்பெனி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News