செப்டம்பரில் அறிமுகமாகவிருக்கும் புதிய ஐபோன் எப்படி இருக்கும்? கசிந்த தரவுகள்!
Color Of Apple iPhone : செப்டம்பரில் வெளியாகும் புதிய ஐபோன் எப்படி இருக்கும்? வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ஊகங்களும் எதிர்பார்ப்புகளும்... காரணம் என்ன?
அழகான பெண்கள் பிறரின் மனதை கொள்ளையடிப்பதைப் போல ஆப்பிள் நிறுவனத்தின் நவீன ஐபோன், பெண்களின் மனதையே கொள்ளையடிக்கப் போகிறது. வழக்கம் போலவே, இந்த ஆண்டு வெளியாகவிருக்கும் ஐபோன் 2024 அற்புதமாக இருக்கும். அதிலும் பெண்களின் முகத்தில் புன்சிரிப்பை வரவழைக்கும் ஒரு மாற்றம் இந்த ஐபோனில் இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐபோன் 16 ப்ரோ போனை வெளியிடவிருக்கும் அப்பிள் தனது புதிய அறிமுகத்தில் தொடரில் என்ன செய்யும் என்ற எதிர்பார்ப்புகள் எகிறிக் கொண்டிருக்கும் நிலையில், இந்த முறை ஆப்பிள் ஐபோன் பெண்களின் விருப்பமான சிவப்பு நிறத்தில் அறிமுகப்படுத்தலாம்.
இந்த விசயத்தை ஊகிப்பதற்கு அடிப்படை சீன சமூக ஊடக தளமான வெய்போவில் வெளியான ஒரு சமூக ஊடக பதிவு தான். டிப்ஸ்டர் ஓவோ பேபி சாஸ் ஓவோ என்பவர் வெளியிட்ட சமூக ஊடக பதிவில், வரவிருக்கும் ஐபோன் 16 ப்ரோ, பெண்களுக்குப் பிடித்தமான புதிய 'ரோஸ்' நிறத்தில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று ஊகித்துள்ளார்.
இந்த புதிய வண்ணம், 2015 ஆம் ஆண்டில் ஐபோன் 6S உடன் முதன்முதலில் காணப்பட்ட ரோஸ் கோல்ட் நிறத்தை ஆப்பிள் மீண்டும் கொண்டு வரக்கூடும் என்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக தெரிகிறது. இதைத் தவிர, ஐபோன் 16 ப்ரோவின் அம்சங்கள் என்ன, சிறப்பம்சங்கள் என ஆப்பிள் நிறுவனத்தின் புதிய வெளியீட்டிற்காக ஆன்லைன் அல்லோகோலப்படுகிறது.
மிங்-சி குவோவின் குறிப்பு
ஆப்பிளின் புதிய போன் தொடர்பாக கசிந்த செய்திகளின்படி, இந்த முறை வரவிருக்கும் ஐபோன் 16 ப்ரோ நீல நிற டைட்டானியம் நிறத்தில் இருக்காது என்றும், இதற்கு பதிலாக, புதிய 'ரோஸ்' நிறம் ஐபோன் 16 ப்ரோவில் இருக்கும். இதனைத் தவிர, புதிய ஆப்பிள் போன் கருப்பு, சாம்பல் மற்றும் வெள்ளி/வெள்ளை வண்ணங்களிலும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரபல ஆய்வாளர் மிங்-சி குவோ, ஆப்பிளின் அடுத்த ஐபோன் தொடரில் புதிய 'ரோஸ்' டைட்டானியம் நிறம் இடம் பெற்றிருக்கலாம் என்று கணித்துள்ளார்.
ஆப்பிள் நிறுவனம் என்ன சொல்கிறது?
வழக்கமான ஐபோன்களைப் போலவே ஐபோன் 16 மற்றும் ஐபோன் 16 பிளஸ் வருமா என்பது தெரியாது. முந்தைய ஐபோன் 15 தொடரில் இடம் பெற்றிருந்த அதே வண்ணங்களில் வரலாம். அதில் இந்த முறை மஞ்சள் நிறத்திற்கு பதிலாக, வெள்ளை நிற விருப்பம் கிடைக்கும். ஐபோன் 16 ப்ரோவின் புதிய 'ரோஸ்' நிறம் அதன் வடிவமைப்பை மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், இந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ள எதுவும் ஆப்பிள் நிறுவனம் அதிகாரபூர்வமாக தெரிவித்த செய்தி அல்ல. ஊகங்களும் எதிர்பார்ப்புகள் மட்டுமே.
பெசல்கள் குறையலாம்
வரவிருக்கும் ஐபோன் 16 சீரிஸ் பெரிய திரை மற்றும் மெல்லிய பெசல்களைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது தொலைபேசியை சிறப்பானதாக மாற்றும். ப்ரோ மாடல் ஐபோன் 16 ப்ரோ பெரிய 6.3 இன்ச் திரையைக் கொண்டிருக்கலாம். ஒரு கையால் இவ்வளவு பெரிய திரையைப் பயன்படுத்துவது சற்று கடினமாக இருக்கும். அதேபோல, ஆப்பிள் உண்மையான பொத்தான்களை அழுத்தும் உணர்வைத் தரும் தொடு உணர் பட்டன்களைக் கொண்டுவருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இந்த பொத்தான்கள் அழுத்தும் போது அதிர்வுறும், உண்மையான பொத்தானை அழுத்துவது போல் தோன்றும். இந்த தொழில்நுட்பம் ஆப்பிளின் டாப்டிக் இன்ஜினை அடிப்படையாகக் கொண்டது. உண்மையில், இந்த தொழில்நுட்பம் ஐபோன் 15 தொடரிலேயே வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் சில தொழில்நுட்ப சிக்கல்களால் அது தாமதமானது என்பதால், போன் பட்டன்கள் தொடர்பான எதிர்பார்ப்புகள் மட்டும் 100 சதவிகிதம் உண்மையாகலாம்.
மேலும் படிக்க | Itel Color Pro 5G.. 10,000 ரூபாயில் அசத்தலான 5G ஸ்மார்போன்...முழு விபரம்..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ