IPL 2023 Free Live Stream: ஐபிஎல் அதிரடி, எல்லா மேட்சையும் இங்க இலவசமா பார்க்கலாம்
IPL 2023 Free Live Stream: ரிலையன்ஸ் ஜியோ தனது JioCinema செயலி மூலம் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
IPL 2023 Free Live Stream: இந்திய கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் ரசிகர்களுக்கு ஒரு மாஸ் செய்தி!! இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 மிக விரைவில் தொடங்க உள்ளது. ஐபிஎல் 2023 மார்ச் 31ம் தேதி தொடங்குகிறது. கடந்த சீசன் வரை, மொபைலில் போட்டிகளை பார்க்க டிஸ்னி + ஹாட்ஸ்டார் சப்ஸ்க்ரிப்ஷன் பெற வேண்டி இருந்தது. ரிலையன்ஸ் ஜியோ தனது JioCinema செயலி மூலம் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இது தவிர, இங்கே நீங்கள் 4K தெளிவுத்திறனுடன் போட்டியை கண்டுகளிக்க முடியும் என்பது குறிப்பிடடத்தக்கது. அதாவது ரிலையன்ஸ் ஜியோ, உயர் தெளிவுத்திறன் கொண்ட போட்டிகளை இப்போது பயனர்களுக்கு இலவசமாக வழங்கும்.
மல்டிகேம் வசதியுடன் போட்டிகளைக் காணலாம்
முன்னதாக, ஐபிஎல் போட்டிகளை ஸ்ட்ரீம் செய்ய டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தாவை வாங்க வேண்டியிருந்தது. மேலும் இது அனைவருக்கும் கிடைக்கவில்லை. அத்தகைய சூழ்நிலையில், ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தாவும் கிடைப்பது போன்ற திட்டங்களை அறிமுகப்படுத்தின.
இந்த ஆண்டுக்கான முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. ஃபிஃபா உலகக் கோப்பை 2022 ஜியோசினிமாவில் ஒளிபரப்பப்பட்டது. மல்டிகேம் வசதியுடன் போட்டியைக் காண முடிந்தது. அதாவது, இந்த வசதி மூலம் பல கேமராக்களுக்கு மாறி போட்டியை அனைத்து கோணத்திலும் பார்க்க முடியும். ஐபிஎல் போட்டிகளிலும் அப்படித்தான் நடக்கும்.
மேலும் படிக்க | ஐபிஎல் 2023-ல் மெகா போட்டி இதுதான்..! சென்னை - மும்பை மேட்ச் ஸ்பெஷல்
போட்டிகளின் வர்ணனையை 12 மொழிகளில் கேட்க முடியும்
JioCinema செயலியில் 12 வெவ்வேறு மொழிகளில் ஐபிஎல் போட்டிகளைப் பார்க்கும் வசதியும் இருக்கும். இந்தப் போட்டியை ஆங்கிலம், தமிழ், இந்தி, தெலுங்கு, மராத்தி, குஜராத்தி, பெங்காலி, போஜ்புரி போன்ற மொழிகளில் பார்க்கலாம். நீங்கள் போட்டியின் மொழியை மாற்றினால், ஆப்ஸ் வர்ணனையை மட்டும் மாற்றாது. புள்ளிவிவரங்கள் மற்றும் கிராபிக்ஸ் ஆகியவற்றிலும் மாற்றம் தெரியும்.
வரவிருக்கும் ஜியோ 5ஜி திட்டங்கள்
ரிலையன்ஸ் ஜியோ தனது 5ஜி சேவையை 250க்கும் மேற்பட்ட இந்திய நகரங்களுக்கு விரிவுபடுத்தியுள்ளது. ஆனால் இப்போது நெட்வொர்க்கில் சில சிக்கல்கள் உள்ளன. கால் டிராப் பிரச்னையால் மக்கள் அவதிப்படுகின்றனர். இந்தியாவின் மிக பிரபலமான தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ இன்னும் 5ஜி திட்டங்களை அறிமுகம் செய்யவில்லை. ஜியோ நிறுவம் நாடு முழுவதும் 5ஜியை வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியதும், 5ஜி திட்டங்கள் வெளிப்படுத்தப்படும்.
மேலும் படிக்க | IPL 2023: சிஎஸ்கே விளையாடும் போட்டிகள்... முழு விவரம் - மார்க் பண்ணி வச்சுக்கோங்க!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ