மார்க்கெட்டே புரளப்போகுது.. 5000mAh பேட்டரி கொண்ட iQOO Neo 9 Pro இந்த தேதியில் அறிமுகம்
நிறுவனம் அதன் மற்றொரு தொலைபேசியான நியோ 9 ப்ரோவை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதன்படி இறுதியாக, இந்த போன் பிப்ரவரி 22 அன்று அறிமுகப்படுத்தப்படும் என்று iQOO தெரிவித்துள்ளது.
கடந்த மாதம், iQOO அதன் சமீபத்திய தொலைபேசியான iQOO 12 5G ஐ அறிமுகப்படுத்தியது, இது சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 8 Gen 3 சிப் மூலம் இயக்கப்படுகிறது. தற்போது, இந்த ஸ்மார்ட்ஃபோன் அறிமுகப்படுத்தப்பட்ட சிறிது நாட்களிலேயே, நிறுவனம் அதன் மற்றொரு தொலைபேசியான நியோ 9 ப்ரோ ஸ்மார்ட்ஃபோனை இந்தியாவில் அறிமுகம்படுத்த உள்ளது. அதன்படி தற்போது இறுதியாக, இந்த போன் பிப்ரவரி 22 அன்று அறிமுகப்படுத்தப்படும் என்று iQOO உறுதிப்படுத்தியுள்ளது. இந்த போனில் இருந்து என்ன எதிர்பார்க்கலாம் என்று பார்ப்போம்.
டிசம்பர் மாதத்தில், நியோ 9 (Neo 9) மற்றும் நியோ 9 ப்ரோ (Neo 9 Pro) ஆகிய இரண்டு புதிய IQOO ஸ்மார்ட்போன்கள் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டன. நியோ 9 புதிய ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 2 சிப்செட்டையும், நியோ 9 ப்ரோவில் டைமென்சிட்டி 9300 சிப்செட் உள்ளது. இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் நியோ 9 ப்ரோ உண்மையில் சீனாவில் கிடைக்கும் நியோ 9 இன் மற்றொரு பெயராக இருக்கலாம் என்று தகவல்கள் கூறப்படுகிறது. எனவே இப்போது டிப்ஸ்டர் யோகேஷ் ப்ரார் X இல், ஸ்கிரீன் ஷாட்டைப் பகிர்ந்துள்ளார் மற்றும் தொலைபேசியின் விலை எவ்வளவு மற்றும் என்ன அம்சங்கள் கிடைக்கும் என்பதையும் பகிர்ந்துள்ளார்...
iQOO Neo 9 Pro இந்தியாவில் எதிர்பார்க்கப்படும் விலை | iQOO Neo 9 Pro Expected price in India:
டிப்ஸ்டர் யோகேஷ் பிரார் கருத்துப்படி, இந்தியாவில் iQOO Neo 9 Pro விலை சுமார் ரூ.40,000 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இது அறிமுகப்படுத்தப்படும் போது தான் இதன் சரியான விலை எவ்வளவு என்கிற தகவல் வெளியாகும்.
iQOO Neo 9 Pro எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் | iQOO Neo 9 Pro Expected Features:
பெரிய டிஸ்ப்ளே: 6.78 அங்குல OLED, 1.5K ரெஜோல்யூஷன் மற்றும் 144Hz ரிஃப்ரெஷ் ரேட்.
லேட்டஸ்ட் சாஃப்ட்வேயர்: Android 14 மற்றும் FunTouch OS 14.
ஃபாஸ்ட் மற்றும் சிக்யோர்: அண்டர்-டிஸ்பிள் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார்.
சிறந்த செல்ஃபிகள்: முன்பக்கத்தில் 16MP கேமரா.
சிறந்த புகைப்படங்கள்: 50MP Sony IMX920 கேமரா (OIS உடன்) மற்றும் பின்புறத்தில் 8MP அல்ட்ரா-வைட்.
சக்திவாய்ந்த செயலி: Snapdragon 8 Gen 2 சிப்செட்.
நீண்ட பேட்டரி ஆயுள்: 5,160mAh பெரிய பேட்டரி மற்றும் 120W வேகமாக சார்ஜிங்.
அதிக ரேம் மற்றும் சேமிப்பு: 12ஜிபி வரை LPDDR5x ரேம் மற்றும் 512ஜிபி வரை UFS 4.0 சேமிப்பு.
மற்ற அம்சங்கள்: இரட்டை ஸ்பீக்கர்கள் மற்றும் ஐஆர் பிளாஸ்டர்.
மேலும் படிக்க | ரூ 151 ரீசார்ஜ் பிளான்.. ஓவரா ஆஃபரை அள்ளிக்கொட்டிய பிஎஸ்என்எல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ