iQOO நிறுவனம் புதிய 5G ஸ்மார்ட்போனான iQOO Neo 6 5G- ஐ இந்தியாவில் இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டு ஒரு மணி நேரத்தில் விற்பனைக்கும் வந்துள்ளது. அதுவும் அதிரடி ஆஃபர் மற்றும் சலுகைகளுடன் விற்பனை செய்யபடுகிறது. இ-காமர்ஸ் இணையதளமான Amazon-ல் மட்டுமே இந்த ஸ்மார்ட்போனை வாங்க முடியும். 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி சேமிப்பு மாடலை 30 ஆயிரம் ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஸ்மார்ட்போன் அறிமுகத்தையொட்டி 15 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

iQOO Neo 6 5G முதல் விற்பனை 


மே 31 ஆம் தேதியான இன்று இரண்டு ஸ்டோரேஜ் வகைகளில் iQOO நியோ 6 5G ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே கூறியதுபோல் அமேசான் தளத்தில் மட்டுமே கிடைக்கக்கூடிய இந்த ஸ்மார்ட்போன், இரண்டு வகையிலான ஸ்டோரேஜ்ஜில் அறிமுகமாகியுள்ளது. 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி சேமிப்பு வேரியண்ட் 33,999 ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 8 ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.29,999.


அமேசானில் அதிரடி ஆஃபர்


இந்த ஸ்மார்ட்போனை அமேசான் மூலம் வாங்கினால், கவர்ச்சிகரமான பல சலுகைகள் உங்களுக்கு கிடைக்கும். 29,999 ரூபாய் 5ஜி ஸ்மார்ட்போன் மாடலுக்கு உடனடியாக ஆயிரம் ரூபாய் தள்ளுபடி கூப்பன் வழங்கப்படுகிறது. இதன் மூலம் உங்கள் ஸ்மார்ட்போனின் விலை ரூ.28,999 ஆக குறையும். இது மட்டுமின்றி, ஐசிஐசிஐ வங்கியின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் இந்த போனை வாங்கினால், 3 ஆயிரம் ரூபாய் உடனடி தள்ளுபடி கிடைக்கும். இதன் மூலம் ஸ்மார்ட்போனின் விலை 25,999 ஆக மாறும். 


மேலும் படிக்க | iPhone பயனர்களுக்கு ஷாக்: திடீரென மறைந்தது இந்த அம்சம்


ரூ. 15 ஆயிரத்திற்கு வாங்குங்கள்!


இப்போது iQOO Neo 6 5G -ஐ 30 ஆயிரம் ரூபாய்க்கு பதிலாக 15 ஆயிரம் ரூபாய்க்கு வாங்குவது எப்படி என்று பார்ப்போம். வங்கி சலுகைகள் மற்றும் கூப்பன் தள்ளுபடிகளுக்குப் பிறகு, இந்த போனின் விலை ரூ.29,999-ல் இருந்து ரூ.25,999 -ஆக குறைந்திருக்கும். இப்போது, ​​உங்கள் பழைய போனுக்கு மாற்றாக இந்த ஸ்மார்ட்போனை வாங்குவதன் மூலம் ரூ.10,550 வரை சேமிக்கலாம். இந்த எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழுப் பலனையும் நீங்கள் பெற்றால், இந்த போனின் விலை உங்களுக்கு ரூ.15,449 ஆக குறைந்துவிடும். 


iQOO Neo 6 5G -ன் அம்சங்கள்


iQOO-ன் சமீபத்திய 5G ஸ்மார்ட்போன் Snapdragon 870 SoC-ல் வேலை செய்கிறது. 80W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வரும் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் இதுவாகும். இதில் உங்களுக்கு 4700mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. 6.62-இன்ச் முழு HD + E4 AMOLED டிஸ்ப்ளே மற்றும் 120Hz புதுப்பிப்பு வீதத்துடன், ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 OS-ல் வேலை செய்கிறது. 16MP செல்பி கேமரா இருக்கும்.  பிரதான கேமரா 64MP ஆகும். 8MP அல்ட்ராவைடு கேமரா மற்றும் 2MP மேக்ரோ சென்சார் ஆகியவையும் பின்புறத்தில் இருக்கும்.


மேலும் படிக்க | எக்ஸ்சேஞ்ச் மூலம் ஆப்பிள் ஐபோன் வாங்க அருமையான வாய்ப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR