மொபைல் ஸ்டோரேஜை வாட்ஸ்அப்பே அடைத்துவிட்டதா... பிரச்னைக்கு எளிய நான்கு தீர்வு?
Whatsapp Chat Backup: மொபைலின் ஸ்டோரேஜை வாட்ஸ்அப் அதிகமாக எடுத்திருக்கும்பட்சத்தில், அதில் பேக்அப் எடுக்கும் எளிமையான நான்கு வழிகளை இங்கு காணலாம்.
Whatsapp Chat Backup, Storage: தொழில்நுட்பம் என்பது பல வகையில் ஒருவருக்கு வசதிகளை வழங்குகின்றன. அன்றாட வாழ்வில் கவலைகள் இன்றி வாழவே இந்த தொழில்நுட்பங்கள் கொண்டுவரப்பட்டன எனலாம். ஆனால், இன்றைய அதிநவீன யுகத்தில் தொழில்நுட்பம் சார்ந்த கவலைகள் பலரையும் தற்போது பீடித்துள்ளன எனலாம். ஸ்மார்ட்போனை எடுத்துக்கொண்டாலே பல பிரச்னைகளை பலரும் சந்திக்கின்றனர்.
டிஸ்பிளே, பேட்டரி, ஸ்டோரேஜ் சார்ந்த பல பிரச்னைகள் ஸ்மார்ட்போனில் பலரும் சந்திப்பார்கள். அதாவது உடைந்த டிஸ்பிளே, வேகமாக குறையும் பேட்டரியின் சார்ஜ், புது மொபைலிலும் வேகமாக நிறையும் ஸ்டோரேஜ் ஆகியவை குறித்து மக்கள் அதிகம் புழும்புகிறார்கள் எனலாம். இதில் இருந்து விடுபட தங்களின் தேவைக்கேற்ப மொபைல்களை வாங்கிக்கொள்ளலாம் என்றாலும் பட்ஜெட் விலையில் வாங்குபவர்களுக்கு இவையனைத்தையும் பெறுவது எளிதான ஒன்றில்லை.
பேக்அப் முக்கியம் பிகிலு
இது முக்கிய பிரச்னை, ஸ்டோரேஜ்தான். ஸ்டோரேஜ் குறைவாக இருப்பதால் நினைத்த நேரத்தில் போட்டோக்களையும், வீடியோக்களையும் எடுக்க முடியாமல், ஒவ்வொன்றாக அழித்து அழித்து புதியவற்றை எடுப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். ஸ்டோரேஜ் இல்லையென்றால், சாதாரண செயலி முதல் கேமரா வரை எந்த அம்சமும் பிரச்னையின்றி செயல்படாது.
மேலும் படிக்க | தொலைந்த ஆதார் கார்டு உடனடியாக பெறுவது எப்படி? டெக் டிப்ஸ்
குறிப்பாக, வாட்ஸ்அப்பில் நிறைந்திருக்கும் குட் மார்னிங், குட் நைட் மெசேஜ்கள் உள்பட அனைத்து பார்வட் மெசேஜ்களும் ஸ்டோரேஜை அதிகம் பிடித்துக்கொள்கின்றன. எனவே, வாட்ஸ்அப்பை கட்டுப்படுத்தி வைப்பதன் மூலமும் உங்களின் ஸ்டோரேஜ் பிரச்னையை உங்களாலேயே எளிதில் சரி செய்ய முடியும். குறிப்பாக, புகைப்படங்கள், வீடியோக்கள் எதையும் டெலிட் செய்யாமல் பேக்அப் எடுத்துவைத்துக் கொள்ளலாம்.
4 வழிகள்
சேட் பேக்அப்பிற்கு வரம்பற்ற சேமிப்பிடத்தை வழங்குவது வாட்ஸ்அப் எப்போதோ நிறுத்திவிட்டது. எனவே, வாட்ஸ்அப் பயனர்கள் சேட் பேக்அப் சார்ந்தவற்றை தெரிந்துவைத்துக்கொள்வது அவசியமாகும். அந்த வகையில், இங்கு பின்வரும் நான்கு முறைகளை பின்பற்றி உங்களின் சேட் டேட்டாவை நீங்கள் பேக்அப் செய்துகொள்ளலாம்.
ஃபார்வர்ட் மெசேஜ்களை டெலீட் செய்யுங்கள்: முன்பு சொன்னது போலவே வாட்ஸ்அப்பில், அதிக இடத்தை எடுத்துக் கொள்வது ஃபார்வர்டு செய்யப்பட்ட மெசேஜ்கள், வீடியோக்கள், புகைப்படங்கள்தான். ஸ்டோரேஜை நிர்வகிக்க பலமுறை அனுப்பப்பட்ட கோப்புகளைக் கண்டறிந்து அவற்றை டெலீட் செய்யலாம்.
பழைய சேட்டுகளை தேடி தேடி தூக்குங்கள்: ஸ்டோரேஜை சேமிக்க, உங்களுக்கு தேவையில்லாத பழைய வாட்ஸ்அப் சேட்களை டெலீட் செய்யவும். குழு மெசேஜ்களில் பழைய அல்லது பயனற்ற செய்திகளை நீக்குவதன் மூலம் நல்ல ஸ்டோரேஜ் கிடைக்கும். Archive-விலும் நீங்கள் மெசேஜ் வைத்திருந்தால், அதனை டெலீட் செய்யும்பட்சத்தில் ஸ்டோரேஜ் கிடைக்கும்.
பெரிய டாக்குமெண்ட்களை நீக்கவும்: வாட்ஸ்அப்பில் சேட் பேக் அப் எடுக்க இது ஒருப சிறந்த வழியாகும். அரட்டைகளை சேட் பேக் அப்பை எடுப்பதற்கு முன், அரட்டைகளில் இருந்து புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும டாக்குமெண்டுகள் போன்ற பெரிய கோப்புகளை டெலீட் செய்யவும். இதற்கு வாட்ஸ்அப் செட்டிங்ஸ் சென்று 'Storage And Data' ஆப்ஷனை ஓபன் செய்து, 'Manage Storage' என்பதில் இருந்து 5MB-க்கும் அதிகமான பைல்களை கண்டுபிடித்து டெலீட் செய்யவும்.
மறையும் மெசேஜ்கள்: Turn On Disappearing Message என்ற அற்புதமான அம்சத்தை பயன்படுத்தவும். வாட்ஸ்அப்பில் உங்களின் தேவையில்லாத சேட்களுக்கு சென்று இந்த ஆப்ஷனை குறிப்பிடும்பட்சத்தில் குறிப்பிட்ட நேரத்தில் அந்த சேட் டேட்டாக்கள் அழிந்துவிடும், ஸ்டோரேஜ் அதிகரிக்கும்.
மேலும் படிக்க | உச்சம் தொட்ட Raider 125... 7 லட்சத்திற்கும் மேல் விற்பனை - ஓரம்போன Apache!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ