ஜியோ ப்ரீபெய்ட் ரீசார்ஜில் வாடிக்கையாளர்களுக்கு பல நல்ல விருப்பங்கள் இருந்தாலும், இவற்றில் சிறந்ததை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், நல்ல வேலிடிட்டியுடன் கூடிய சூப்பரான பிளானை இங்கே பார்க்கலாம். இந்த திட்டத்தில், நீங்கள் எதிர்பார்க்கும் வேலிடிட்டி உள்ளிட்ட பல சிறப்பான நன்மைகளும் இருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜியோ ப்ரீப்பெய்ட் பிளான்


இந்த திட்டத்தின் விலை ரூ.719. விலையை கேட்டால் காஸ்டிலியாக இருக்கும். ஆனால் ஒருமுறை ரீச்சார்ஜ் செய்துவிட்டால் 3 மாதங்களுக்கு ரீச்சார்ஜ் பற்றி நீங்கள் யோசிக்க வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் இதன் வேலிடிட்டி 84 நாட்கள். இந்தத் திட்டத்தைப் பயன்படுத்தி, ஜியோ வாடிக்கையாளர்கள் தங்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தில், பயனர்கள் தினசரி 2 ஜிபி டேட்டாவைப் பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது, அதாவது மொத்தம் 168 ஜிபி வழங்கப்படுகிறது. பயனர்கள் வரம்பற்ற 5G டேட்டாவைப் பயன்படுத்தலாம். இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு வசதியும் வழங்கப்படும்.


மேலும் படிக்க | IPL 2023: ஆட்டத்தை மாற்றிய அர்ஷ்தீப் சிங்... மும்பை இந்தியன்ஸ் அதிர்ச்சி தோல்வி!


ஜியோ சப்ஸ்கிரிப்சன்


வாடிக்கையாளர்கள் தினமும் 100 எஸ்எம்எஸ் பயன்படுத்தும் வசதியும் வழங்கப்படும். இது தவிர, ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ கிளவுட் ஆகியவற்றின் இலவச சந்தாவும் இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் மாதச் செலவு ரூ.240 ஆகும். நீங்கள் ஒவ்வொரு மாதமும் 200 முதல் 500 ரூபாய் வரையிலான ப்ரீபெய்ட் திட்டத்தை எடுத்துக் கொண்டால், அதில் ஏறக்குறைய ஒரே மாதிரியான பலன்கள் கொடுக்கப்பட்டால், இந்தத் திட்டம் உங்களுக்குச் சிறந்ததாக இருக்கும். அதே சமயம் இன்டர்நெட் மற்றும் அழைப்பு பற்றி யோசிக்க வேண்டியதில்லை. இந்த ரீசார்ஜை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள விரும்பினால், ஜியோவின் இணையதளத்திலிருந்தும் அதைத் தேர்வு செய்து அதன் பலன்களையும் பார்க்கலாம்.


மேலும் படிக்க | IPL 2023: கடைசி ஓவரில் 4 விக்கெட்... கேஎல் ராகுலால் சொதப்பியது லக்னோ - குஜராத் மாஸ் வெற்றி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ