ரூ.222-க்கு 30 நாட்கள் வேலிடிட்டியுடன் அன்லிமிடெட் டேட்டா! அசத்தும் ஜியோ!
ஜியோவின் ரூ.222 திட்டத்தில் அன்லிமிடெட் அழைப்புகள் போன்ற பலவித நன்மைகள் வழங்கப்படுகிறது, 30 நாட்கள் வேலிடிட்டியுடன் வரும் இந்த திட்டம் உங்களுக்கு 50ஜிபி அதிவேக 4ஜி டேட்டாவை வழங்குகிறது.
கத்தாரில் நடைபெற்று வரும் கால்பந்து உலகக்கோப்பை போட்டியை முன்னிட்டு இந்தியாவின் மிகவும் பிரபலமான தொலைத்தொடர்பு நிறுவனங்களுள் ஒன்றான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியாவில் புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜியோ தற்போது அதன் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.222 ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இது 4ஜி டேட்டா வவுச்சரை வழங்குகிறது. இந்த புதிய ரூ.222 திட்டத்தை பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் செயலில் உள்ள திட்டத்தை வைத்திருக்க வேண்டியது அவசியம் என்று கூறப்பட்டுள்ளது. தினசரி 2 ஜிபி டேட்டா வரம்பைவிடவும் அதிகமாக 4ஜி டேட்டாவைப் பயன்படுத்துபவர்களுக்கு இந்தத் திட்டம் பொருத்தமாக இருக்கும்.
மேலும் படிக்க | ஆன்லைன் ரிவ்யூக்களுக்கு செக் வைத்த அரசு! இனி இஷ்டத்துக்கு போட முடியாது
இந்த புதிய ரூ.222 ரீசார்ஜ் திட்டத்தை ஜியோ நிறுவனம் 'கால்பந்து உலகக் கோப்பை டேட்டா பேக்' என்று அழைக்கிறது. இது தற்போது கால்பந்து உலகக் கோப்பை போட்டிகளை ஸ்மார்ட்போன்களில் நேரடியாக ஸ்ட்ரீம் செய்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஜியோவின் ரூ.222 திட்டத்தில் அன்லிமிடெட் அழைப்புகள் போன்ற பலவித நன்மைகள் வழங்கப்படுகிறது. 30 நாட்கள் வேலிடிட்டியுடன் வரும் இந்த திட்டம் உங்களுக்கு 50ஜிபி அதிவேக 4ஜி டேட்டாவை வழங்குகிறது. டேட்டா வவுச்சரை முதன்மைத் திட்டத்தின் 2ஜிபி டேட்டா தீர்ந்த பின்னரே பயன்படுத்த முடியும் மற்றும் 50ஜிபி டேட்டாவை பயன்படுத்தினால் இணைய வேகம் 64 கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.
மேலும் இலவச அன்லிமிடெட் அழைப்புகளுடன் தினசரி எஸ்எம்எஸ் மற்றும் ஓடிடி சேவைகளுக்கான இலவச சந்தாவையும் திட்டத்தின் மூலமாக பெற்றுக்கொள்ளலாம். மை ஜியோ அல்லது ஜியோ இணையதளத்திற்குச் சென்று இந்த ரீசார்ஜ் திட்டத்தை செயல்படுத்திக்கொள்ளலாம். இந்தத் திட்டம் கால்பந்து உலகக்கோப்பைக்காக அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதால், போட்டி முடிந்ததும் இந்த திட்டமும் நிறுத்தப்படக்கூடும். இருப்பினும் இதுகுறித்து எவ்வித தெளிவான தகவல்களையும் தொலைத்தொடர்பு நிறுவனம் வெளியிடவில்லை.
மேலும் படிக்க | யுபிஐ செயலியில் ஆட்டோமேடிக் பேமெண்ட் செட் செய்வது எப்படி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ