இமயமலையில் கொடி நாட்டும் ஜியோ 5ஜி - கேதார்நாத் செல்வோருக்கு குட் நியூஸ்
கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் ஆகிய புனித தலங்களுக்கு யாத்திரை செல்வோர் ஜியோவின் 5ஜி சேவையை இனிமேல் பெற முடியும். இந்த சேவையை இப்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பிரபலமான புனித தலங்களில் ஒன்றான கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் ஆகிய கோவில்களுக்கு செல்வோருக்கு நெட்வொர்க் பிரச்சனை இருந்து வருகிறது. இமயமலைப்பிரதேசம் என்பதால் அங்கு நெட்வொர்க் கிடைக்காமல், அடிக்கடி சிக்கலில் மாட்டிக் கொள்கின்றனர். அவசர தேவைக்கு உதவிக்கு கூட யாரும் அழைக்க முடியாத சூழல் இருந்தது. உலகில் அதிக இயற்கை பேராபத்துகள் நிகழும் இடங்களில் ஒன்றாக அந்த பகுதிகள் இருப்பதால், அங்கு முறையான இணைய சேவை ஏற்படுத்த வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்தத்து. லட்சணக்கான பக்தர்கள் செல்லும் அக்கோயில் யாத்திரை பாதைகளில் தங்கு தடையில்லாமல் நெட்வொர்க் கிடைக்கும் வகையில் கோயில் நிர்வாகம் சார்பிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இப்போது அதற்கு பலன் கிடைத்துள்ளது. கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் கோயில்களுக்கு புனித யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள் இனி 5ஜி சேவையை பெற முடியும். இதற்கான அறிவிப்பை கேதார்நாத் கோயில் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. குளிர்காலம் முடிவடைந்த நிலையில், உத்தரகாண்டில் சார் தாம் யாத்திரை தொடங்கியுள்ளது. இந்த சிறப்பு சந்தர்ப்பத்தில், ஜியோ தனது ஜியோ ட்ரூ 5ஜி சேவையை சார் தாமா கோவில்களில் அறிமுகப்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | Realme: DSLR கேமராவுக்கு போட்டியாக வந்தாச்சு Realme ஸ்மார்ட்போன்..! 200MP கேமரா
இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள ஜியோ ட்ரூ 5ஜி பயனர்கள் கேதார்நாத், பத்ரிநாத், யமுனோத்ரி மற்றும் கங்கோத்ரி தாம் ஆகிய இடங்களுக்குச் செல்லும்போது ஜியோ ட்ரூ 5ஜி நெட்வொர்க்கை அனுபவிக்க முடியும். பத்ரிநாத் கேதார்நாத் கோயில் கமிட்டி (BKTC) தலைவர் அஜேந்திர அஜய் பத்ரிநாத்தில் புதிய சேவையை தொடங்கி வைத்தார். இந்த சிறப்பு நிகழ்ச்சியில் KKTC துணைத் தலைவர் கிஷோர் பன்வார், CEO யோகேந்திரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஜியோ சேவை
ஜியோவின் 5ஜி சேவை தொடக்க நிகழ்வில் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும்போது, மாநிலத்தின் டிஜிட்டல் நிலப்பரப்பில் மாற்றத்தை ஏற்படுத்தியதற்காகவும், பயணத்தின் தொடக்கத்திலேயே 5ஜி சேவையைத் தொடங்கியதற்காகவும் ஜியோவுக்கு வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம், லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் அதிவேக டேட்டா நெட்வொர்க்கைப் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பைப் பெறுவார்கள் என கூறினார்.
எவ்வளவு வேகம் கிடைக்கும்?
கங்கோத்ரி, யமுனோத்ரி மற்றும் கேதார்நாத்திற்குப் பிறகு, ஏப்ரல் 27 அன்று, பத்ரிநாத்தின் கதவுகளும் பக்தர்களுக்காக திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். குளிர்காலத்தில் சார்தாம் யாத்ரா 6 மாதங்களுக்கு மூடப்படும். இப்போது Jio True 5G சேவையின் மூலம், பயனர்கள் 1GBPS வரை அதிவேக டேட்டாவைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். தகுதியான பயனர்கள் வரம்பற்ற 5G டேட்டாவையும் பெறுவார்கள்.
மேலும் படிக்க | உங்கள் பட்ஜெட்டில் அசத்தலான கேமராக்களுடன் கிடைக்கும் டாப் 5 ஸ்மார்ட்போன்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ