ரிலையன்ஸ் ஜியோ ரூ 749 திட்டம்: மொபைல் போன்கள் நமது வாழ்வின் இன்றியமையாத அம்சம் ஆகிவிட்டன. ஒரு காலத்தில் மாதாந்திர திட்டங்கள் பிரபலமாக இருந்தன. பயனர்கள் ஒவ்வொரு மாதமும் ரீசார்ஜ் செய்ய வேண்டியிருந்தது. ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது. இப்போது நீண்ட காலத்துக்கு செல்லுபடியாகும் திட்டங்கள் வந்துள்ளன. அவற்றின் விலை மிக குறைவாகவும் உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரிலையன்ஸ் ஜியோ  நாட்களுக்கான ஒரு அற்புதமான திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தில் குறைந்த செலவில் அதிக நாட்களுக்கான செல்லுபடி கிடைக்கும். பெரும்பாலான திட்டங்கள் 80 முதல் 84 நாட்கள் வரை செல்லுபடியாகும். ஆனால் இத்திட்டத்தில் மூன்று மாதங்களுக்கான செல்லுபடி காலம் கொடுக்கப்படும். இந்த திட்டத்தை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 


ரிலையன்ஸ் ஜியோ ரூ 749 திட்டம்


தற்போது வந்துள்ள திட்டத்தின் விலை ரூ.749 ஆகும். ஜியோவின் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு மற்றும் கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது. 90 நாட்கள் வேலிடிட்டியுடன், 2ஜிபி தினசரி டேட்டாவுடன் மொத்தம் 108ஜிபி டேட்டா இதில் கிடைக்கும். இந்த திட்டத்தில் வரம்பற்ற டேட்டா சலுகையும் கிடைக்கிறது, ஆனால் இதில் வேகம் 64 Kbps ஆக குறைக்கப்படும். 


மேலும் படிக்க | Flipkart Big Saving Days: வெறும் ரூ. 740-க்கு சாம்சங் ஸ்மார்ட் டிவி, நம்புங்க..உண்மைதான் 


இது தவிர, வரம்பற்ற அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ பயன்பாடுகளின் இலவச பலன்கள் ஆகியவை இந்த திட்டத்தில் கிடைக்கும்.



இந்த திட்டத்தில் 5ஜி கிடைக்கும்


நீங்கள் ஜியோ 5ஜி உள்ள நகரத்தில் இருந்தால், நிறுவனம் 5ஜி வெல்கம் ஆஃபரின் கீழ் வரம்பற்ற 5ஜி டேட்டாவையும் வழங்குகிறது. உங்களிடம் 5ஜி ஃபோன் இருந்து, ஜியோ 5ஜிக்கான அழைப்பை நீங்கள் பெற்றிருந்தால், அதை எளிதாகப் பயன்படுத்தலாம்.


இதேபோன்ற மற்றொரு திட்டத்தையும் ஜியோ கொண்டுள்ளது. இந்த திட்டத்தின் விலை ரூ.719 ஆகும். இதில் 84 நாட்கள் வேலிடிட்டி மற்றும் 168 டேட்டா வழங்கப்படுகிறது. இது தவிர வரம்பற்ற அழைப்பு மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வசதியும் இதில் உள்ளது.


மேலும் படிக்க | இவ்வளவு சிறப்பம்சங்களா? அசத்தும் சியோமி ரெட்மி நோட் 12 ஸ்மார்ட்போன்! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ