இவ்வளவு சிறப்பம்சங்களா? அசத்தும் சியோமி ரெட்மி நோட் 12 ஸ்மார்ட்போன்!

இந்திய சந்தையில் ரூ.13,690 விலையில் கிடைக்கும் சியோமி ரெட்மி நோட் 12 ஸ்மார்ட்போன் அரோரா ப்ளூ, க்ளாஸியர் ஒயிட் மற்றும் சாம்பல் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.   

Written by - RK Spark | Last Updated : Dec 21, 2022, 07:54 AM IST
இவ்வளவு சிறப்பம்சங்களா? அசத்தும் சியோமி ரெட்மி நோட் 12 ஸ்மார்ட்போன்! title=

இந்திய சந்தையில் சியோமி ரெட்மி நோட் 12 ஸ்மார்ட்போனை விற்பனைக்கு கொண்டு வர நிறுவனம் முடிவு செய்துள்ளது.  இந்த ஸ்மார்ட்போன் 6.67 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே, 1080 x 2400 ஸ்க்ரீன் ரெசொல்யூஷனுடன், மீடியா டெக் இம்மென்சிட்டி 820 எம்டி6875 ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது.  இந்த ஸ்மார்ட்போனானனது 5000 எம்ஏஹெச் பேட்டரியை கொண்டுள்ளது மற்றும் இது ஆண்ட்ராய்டு வி11 மூலம் இயங்குகிறது.  48 எம்பி + 2 எம்பி பிரைமரி சென்சார் கொண்ட கேமரா அமைப்பையும் 8 எம்பி அளவுக்கொண்ட செல்ஃபி கேமரா அமைப்பையும் கொண்டுள்ளது.  

மேலும் படிக்க | Flipkart Offer: ரூ.15,000-க்கும் குறைவான விலையில் சூப்பரான ஸ்மார்ட்போன்கள்! 

4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இந்த சியோமி ரெட்மி நோட் 12 ஸ்மார்ட்போனானது 2ஜி, 3ஜி, 4ஜி, 5ஜி எல்டிஇ மற்றும் கைரேகை சென்சாரை கொண்டுள்ளது.  ஜனவரி 5, 2023 அன்று இந்திய சந்தையில் சியோமி ரெட்மி நோட் 12 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இந்திய சந்தையில் ரூ.13,690 விலையில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போன் அரோரா ப்ளூ, க்ளாஸியர் ஒயிட் மற்றும் சாம்பல் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.  மொபைலின் ஸ்டோரேஜ் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டிய தேவையில்லை, இதில் உங்களுக்கு விருப்பமான ஃபைல்கள், போட்டோக்கள், வீடியோக்கள், படங்கள், பாடல்கள் போன்ற அனைத்தையும் நீங்கள் சேமித்து கொள்ளலாம்.

மேலும் சியோமி ரெட்மி நோட் 12 ஸ்மார்ட்போன் வைஃபை 802.11, a/ac/b/g/n, ஹாட்ஸ்பாட், ப்ளூடூத் வி5.0 மற்றும் 5ஜி போன்ற சிறப்பமசங்களை உள்ளடக்கியுள்ளது.  இந்த மொபைலுள்ள சென்சார்கள் ஆக்ஸலரோமீட்டர், கைரோ, ப்ராக்சிமிட்டி போன்றவற்றையும் கொண்டுள்ளது.  மேலும் இந்த ஸ்மார்ட்போனின் உயரம் 165.8 மற்றும் இதன் மொத்த எடை 209 கிராம் ஆகும்.

மேலும் படிக்க | ரூ.17000 மதிப்புள்ள POCO ஸ்மார்ட்போனை வெறும் ரூ.700க்கு வாங்கலாம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News