ஏப்ரம் மாதத்தில் முதல் ரிலையன்ஸ் ஜியோ ‘தண் தணா தண்’ என்னும் சலுகையை மூன்று மாதத்திற்கு வழங்கியது. இந்த ‘தண் தணா தண்’ சலுகை (84 நாள் வேலிடிட்டி) இம்மாதத்துடன் நிறைவு பெறுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் ஜியோவின் அடுத்த கட்டண பட்டியல் வெளியாகியுள்ளது. விவரங்கள் வருமாறு:-
 
ரூ.149 மற்றும் இதர துவக்க திட்டங்களில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படவில்லை. 
 
தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கும் 84 நாள் வேலிடிட்டியை 56 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் விலை ரூ.399 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 
 
தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கும் ரூ.509 திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்களில் இருந்து 56 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. விலையில் எந்த வித மாற்றமும் செய்யவில்லை.


 ரூ.999, ரூ.1999, ரூ.4999 மற்றும் ரூ.9999 திட்டங்களின் வேலிடிட்டி நீட்டிக்கப்பட்டது. மேலும் இந்த திட்டத்தில் அதிக டேட்டா வழங்கப்படுகிறது.