Jio Popular Recharge Plans: நீங்கள் ஏற்கனவே ஜியோ வாடிக்கையாளராக இருந்தால், நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி தான் இது. புதுப் புது பிளான்களை அவ்வப்போது அறிவித்து வரும் ஜியோ, ஹாட்ஸ்டாரை ஆண்டு முழுவதும் இலவசமாக கொடுக்கும் ப்ரீப்பெய்ட் பிளான்களையும் கொண்டிருக்கிறது. இதன்மூலம் தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் புதிய திரைப்படங்களை நீங்கள் இலவசமாக கண்டுகளிக்க முடியும். மலிவு விலையில் கிடைக்கும் இந்த திட்டங்கள், உங்களுக்கும் உபயோகமாக இருக்கலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஓடிடி பிளான்களைக் கடந்து தினசரி இணைய டேட்டா, அன்லிமிட்டெட் அழைப்பு சலுகையும் உண்டு. இது தவிர, நீங்கள் ஜியோவின் பிற சேவைகளைப் பயன்படுத்த முடியும்.


மேலும் படிக்க | ரூ.22-க்கு 90 நாள் வேலிடிட்டி; BSNL பலே திட்டம்


ஜியோ ரீசார்ஜ் திட்டம் ரூ.666


ஜியோவின் இந்த திட்டத்தில், மொத்தம் 84 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த திட்டத்தில், வரம்பற்ற அழைப்புடன் தினசரி இணைய பயன்பாட்டிற்கு 1.5 ஜிபி இணைய டேட்டா கிடைக்கும். திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வசதியையும் பெறுகிறீர்கள். இது தவிர, இந்த திட்டத்தை ஸ்மார்ட்போனில் ரீசார்ஜ் செய்த பிறகு, நீங்கள் ஜியோவின் பிற பயன்பாடுகளான ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ கிளவுட் போன்றவற்றையும் பயன்படுத்த முடியும்.


ஜியோ ரீசார்ஜ் திட்டம் ரூ 499


ஜியோவின் இந்த திட்டத்தில், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரின் சந்தாவைப் பெறுகிறீர்கள். இந்த திட்டத்தின் மொத்த செல்லுபடியாகும் காலம் 28 நாட்கள். இதில் இணைய பயன்பாட்டிற்கு தினமும் 2 ஜிபி டேட்டா கிடைக்கும். அன்லிமிடெட் அழைப்புடன் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்களையும் இந்த திட்டம் வழங்குகிறது.


ஜியோவின் ரூ.249 ரீசார்ஜ் திட்டம்


ஜியோவின் இந்த திட்டத்தில் மொத்தம் 23 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இதில் இணைய பயன்பாட்டிற்கு ஒரு நாளைக்கு 2 டேட்டா கிடைக்கும். இது தவிர, திட்டத்தில் வரம்பற்ற அழைப்புடன் தினசரி 100 எஸ்எம்எஸ் வசதியையும் பெறுவீர்கள். நாட்டில் உள்ள பலர் இந்த திட்டத்தை தங்கள் தொலைபேசியில் ரீசார்ஜ் செய்ய விரும்புகிறார்கள்.


மேலும் படிக்க | iPhone 13 இல் பம்பர் சலுகை! ரூ.29 ஆயிரம் வரை தள்ளுபடி பெறுங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ