iPhone 13 இல் பம்பர் சலுகை! ரூ.29 ஆயிரம் வரை தள்ளுபடி பெறுங்கள்

Apple iPhone 13 Best Offer Flipkart: ஐபோன் 13 ஐ 29 ஆயிரம் ரூபாய் வரை பம்பர் தள்ளுபடியில் வாங்க ஃபிளிபகார்ட் அரிய வாய்ப்பை தந்துள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 31, 2022, 09:02 AM IST
  • இந்தியாவில் iphone 13 விலை
  • flipkart இன் சிறந்த ஸ்மார்ட்போனில் பாம்பார் தள்ளுபடிகள்
  • iPhone 13 இல் சலுகை
iPhone 13 இல் பம்பர் சலுகை! ரூ.29 ஆயிரம் வரை தள்ளுபடி பெறுங்கள் title=

ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர் ஆப்பிள் தனது புதிய ஸ்மார்ட்போன் தொடரான ​​ஐபோன் 14 ஐ அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. அதன்படி நீங்களும் ஐபோனை வாங்க விரும்பினால், இந்த செய்தியை கட்டாயம் படியுங்கள். ஆம், இப்போது நீங்கள் ஐபோன் 13 ஐ ரூ. 29,000 என்கிற பெரும் தள்ளுபடியில் வாங்கலாம். சிறந்த பம்பர் சலுகை இ-காமர்ஸ் இணையதளமான ஃபிளிப்கார்ட்டில் வழங்கப்படுகிறது, இதன் மூலம் நீங்கள் இந்த ஸ்மார்ட்போனை மிகவும் மலிவான்அ விலையில் வாங்கலாம். அந்தவகையில் மலிவு விலையில் இந்த ஸ்மார்ட்போனை எப்படி வாங்கலாம் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்..

ஐபோன் 13 இல் பம்பர் தள்ளுபடி 
ஏ15 பயோனிக் சிப்பில் வேலை செய்யும் ஐபோன் 13 இன் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டைப் பற்றி பேசுகையில், இந்த வேரியண்ட் சந்தையில் ரூ.79,900 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது, இப்போது இதில் ரூ.5,991 தள்ளுபடிக்குப் பிறகு ஃபிளிப்கார்ட்டில் ரூ.73,909க்கு விற்கப்படுகிறது. அத்துடன் இந்த போனை எச்.டி.எஃப்.சி வங்கியின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி வாங்கும்போது ரூ.4,000 வரை சேமிக்கலாம். அந்தவகையில் ஒட்டுமொத்தமாக இந்த ஐபோன் 13 ஐ ரூ.9,991 தள்ளுபடிக்கு பிறகு நீங்கள் ரூ.69,909க்கு போனை வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம்.

மேலும் படிக்க | Second Hand Car வாங்கணுமா? இங்க ஈசியா கடன் கிடைக்கும் 

ரூ.29 ஆயிரம் வரை தள்ளுபடி கிடைக்கும்
மறுபுறம் ஐபோன் 13 இல் 29 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி எப்படி கிடைக்கும் என்று நீங்கள் யோசித்தால், அதைப் பற்றியும் இங்கே விரிவாக தெரிந்து கொள்வோம். அந்த வகையில் ரூ.9,9991 தள்ளுபடிக்குப் பிறகு, உங்கள் பழைய போனுக்குப் பதிலாக ரூ.69,909க்கு ஐபோன் 13ஐ வாங்குவதன் மூலம் ரூ.19 ஆயிரம் வரை சேமிக்கலாம். இந்த ஒப்பந்தத்தில் கொடுக்கப்பட்டுள்ள எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழுப் பலனையும் நீங்கள் பெற்றால், மொத்தத் தள்ளுபடியாக ரூ.28,991 கிடைக்கும், அதன்படி இந்த ஸ்மார்ட்போனை ரூ.50,909க்கு வாங்கலாம். 

ஐபோன் 13 இன் விவரக்குறிப்புகள் 
முன்னதாக நாங்கள் கூறியது போல், இந்த ஒப்பந்தம் ஏ15 பயோனிக் சிப்பில் வேலை செய்யும் ஐபோன் 13 இன் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டில் கொடுக்கப்பட்டுள்ளது. 5ஜி சேவைகள் கொண்ட இந்த போன் 6.1 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. கேமராவைப் பற்றி பேசுகையில், அதன் பின்புற கேமரா அமைப்பில் கொடுக்கப்பட்ட இரண்டு சென்சார்களும் 12எம்பி மற்றும் முன் கேமராவும் 12எம்பி ஆகும்

மேலும் படிக்க | போன் தொலைந்துவிட்டால் GPay, PhonePe மற்றும் Paytm -ஐ பிளாக் செய்வது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News