Jio மூடி மறைத்த இந்த கூடுதல் தொகை மேட்டர்; வெளியான உண்மை தகவல்
பாரதி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா (VIL) இன் போஸ்ட்பெய்ட் திட்டத்தில் தற்போது இருந்த உயர் வருவாய் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்க ரிலையன்ஸ் ஜியோ சமீபத்தில் போஸ்ட் பேய்ட் கட்டண திட்டங்களை வகுத்தது.
புதுடெல்லி: ரிலையன்ஸ் ஜியோவின் (Reliance Jio) போஸ்ட்பெய்ட் திட்டங்களுக்கு குழுசேர வாடிக்கையாளர்கள் பாதுகாப்பு வைப்புத்தொகையை செலுத்த வேண்டியிருக்கும் என்று ட்ராய் (TRAI) நிறுவனத்திடம் தாக்கல் செய்ததை மேற்கோள் காட்டி ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம் சமீபத்தில் அதன் புதிய போஸ்ட்பெய்ட் பிளஸ் சேவையை அறிவித்தது. ரூ .939, ரூ .599, ரூ 799, ரூ 999 மற்றும் ரூ 1499க்கு ஜியோ போஸ்ட்பெய்ட் பிளஸ் திட்டங்கள் ஆனது அதன் சந்தாதாரர்களுக்கு வரம்பற்ற பேச்சு நேர நன்மைகள், டேட்டா ரோல் ஓவர் வசதி மற்றும் பேமிலி ஆட்-ஆன் சிம் வசதி போன்ற நன்மைகளை வழங்கும் என்று அறிவிக்கப்பட்டன.
ALSO READ | ₹.200-க்கும் குறைவான ஏர்டெல், Jio, Vi-யின் அட்டகாசமான ப்ரீபெய்ட் திட்டம்!!
இந்த திட்டங்களை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்கள் பாதுகாப்பு வைப்புத்தொகையை செலுத்த வேண்டியிருக்கும் என்று TRAI இணையதளம் வழியாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி பேஸிக் ரூ.399 ஜியோ போஸ்ட்பெய்ட் பிளஸ் மாதாந்திர திட்ட சந்தாதாரர்கள் ரூ.500ஏ என்கிற பாதுகாப்பு வைப்புத்தொகையை செலுத்த வேண்டும். இதேபோல ரூ.599 போஸ்ட்பெய்ட் பிளஸ் திட்டத்திற்கு ரூ.750 என்றும், ஜியோவின் ரூ.799 போஸ்ட்பெய்ட் திட்டத்திற்கு ரூ.1,000 என்றும், ஜியோ ரூ.999 திட்டத்திற்கு ரூ.1,200 என்றும் மற்றும் கடைசியாக உள்ள ஜியோ ரூ.1,499 போஸ்ட்பெய்ட் பிளஸ் திட்டத்திற்கு ரூ.1,800 என்றும் பாதுகாப்பு வைப்புத்தொகை விலைகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அடிப்படை (ரூ. 399) திட்டத்திற்கு, வாடிக்கையாளர்கள் ரூ .500 தொகையை பாதுகாப்பாக டெபாசிட் செய்ய வேண்டும். ரூ .599 போஸ்ட்பெய்ட் பிளஸ் திட்டத்திற்கு, தேவையான பாதுகாப்பு வைப்பு ரூ .750 ஆகும். ரூ .799 மற்றும் ரூ .999 திட்டங்களுக்கு, சந்தாதாரர்கள் முறையே ரூ .1,000 மற்றும் ரூ .1,200 டெபாசிட் செய்ய வேண்டும்.
ரிலையன்ஸ் ஜியோ, தனது இணையதளத்தில், ரூ .1499 திட்டத்திற்கு குறைந்தபட்ச சந்தா காலம் ஆறு மாதங்கள் என்று தெரியவந்துள்ளது. ஆறு மாத காலத்திற்குள் திட்டத்திலிருந்து வெளியேற விரும்பும் பயனர்களுக்கு ரூ .1499 மற்றும் பொருந்தக்கூடிய வரி விதிக்கப்படும் என்று அது கூறியது.
ஒப்பந்தத்தை மீறுவது அதன் வணிக பயன்பாட்டுக் கொள்கையை மீறுதல், தவறாகப் பயன்படுத்துதல், சில்லறை அல்லாத மற்றும் மோசடி பயன்பாடு ஆகியவற்றின் காரணமாக கணக்கைத் துண்டிப்பது மற்றும் கணக்கைத் தடுப்பது ஆகியவை அடங்கும் என்றும் ஜியோ குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து திட்டங்களிலும் இறுதி மாத வாடகையின் ஒரு பகுதியாக நெட்ஃபிக்ஸ் மொபைல், அமேசான் பிரைம், டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி மற்றும் ஜியோ ஆப்ஸ் ஆகியவற்றிற்கான சந்தா கட்டணமாக ரூ .135 மற்றும் வரி விதிக்கிறது என்றும் ஜியோ வெளிப்படுத்தியது.
ALSO READ | Jio vs BSNL vs Airtel: குறைந்த விலையில் கிடைக்கும் சிறந்த பிராட்பேண்ட் திட்டம் எது?
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR