6G-ஐ கொண்டு வருகிறது ஜியோ..! 5G-ஐ விட 100 மடங்கு இன்டர்நெட் வேகம்
5ஜியை விட 100 மடங்கு இன்டர்நெட் வேகம் கொடுக்கும் 6 ஜிக்கு ஜியோ இப்போதே அடித்தளமிட்டுள்ளது
5ஜி பயன்பாடு இன்னும் முழுமையாக நடைமுறைக்கு வராத நிலையில் ஜியோ நிறுவனம் இப்போதே 6ஜிக்கு அடித்தளமிட்டுள்ளது. 6ஜியின் இண்டர் நெட் வேகம் 5ஜியை விட 100 மடங்கு அதிகமாக இருக்குமாம். இதனால், அடுத்த தலைமுறை நெட்வொர்க்கான 6ஜி குறித்து ஆராய்வதற்கு Oulu பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்படுவதாக ஜியோ அறிவித்துள்ளது. 6G -ன் சிறப்பம்சங்கள் என்னவாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
6G இன்டர்நெட் வேகம்
6ஜியை நெட்வொர்க்கைப் பொறுத்தவரையில் வான்வெளி மற்றும் விண்வெளி தகவல் தொடர்புகளை இன்னும் அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச் செல்லும். ஹாலோகிராபிக் பீம்ஃபார்மிங், சைபர் பாதுகாப்பு, மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஃபோட்டானிக்ஸ் ஆகியவற்றில் தொழில் மற்றும் கல்வித்துறைகளில் 3D தொழில்நுட்பம் சார்ந்த நுண்ணறிவை மேம்படுத்தும். இதனுடைய இணைய வேகத்தைப் பொறுத்தவரையில் டவுன்லோடிங் வேகம் 1,000 Gbps வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read | iPhone 13-ல் இதுவரை இல்லாத தள்ளுபடி: அசத்தும் Flipkart Sale
வளர்ச்சியடையும் துறைகள்
ஜியோவின் 6ஜி பயன்பாட்டுக்கு வரும்பட்சத்தில் பாதுகாப்பு மற்றும் தொழில்துறைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். பரந்த அளவிலான நுகர்வோர்களை உள்ளடக்க உதவும் 6 ஜி நெட்வொர்க், அதிக திறன் கொண்ட டெராஹெர்ட்ஸ் அதிர்வெண்கள் மூலம் சிறந்த இணைப்புகளை வழங்கும். தகவல் பரிமாற்றம் மட்டுமல்லாது இயந்திர உருவாக்கத்திலும், அதன் செயல்பாட்டிலும் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தைக் கொண்டுவரும்.
ஜியோ நிறுவனம் என்ன சொல்கிறது?
ஜியோ பிளாட்ஃபார்ம்ஸின் மூத்த துணைத் தலைவர் ஆயுஷ் பட்நாகர் கூறுகையில், "ஓலு பல்கலைக்கழகத்தில் 6ஜி ஆராய்ச்சியை ஜியோ தொடங்கியுள்ளது. போதுமான தரவுகள் இல்லை என்றாலும், 6G -ன் வேகம் 5G-ஐ விட 100 மடங்கு வேகமாக இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார். சாம்சங்க் நிறுவனம் ஏற்கனவே 1000 ஜிபிபிஎஸ் வேகத்தை வழங்குதற்கான திட்டத்தை வகுத்து செயல்பட்டு வருகிறது. அந்த ரேஸில் இப்போது ஜியோவும் இணைந்துள்ளது.
ALSO READ | Amazon Great Republic Day saleல் அசத்தலான தள்ளுபடியில் டாப்-10 ஸ்மார்ட்போன்கள்!
6G எப்போது அறிமுகம்?
இன்னும் 2 ஆண்டுகளுக்கு 6 ஜி பயன்பாடு வருவதற்கு வாய்ப்பில்லை. 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் 6G தொழில்நுட்பத்தை உள்நாட்டிலேயே பயன்படுத்துவதற்கான முயற்சி இந்தியாவில் இப்போது தொடங்கியிருக்கிறது. இதுகுறித்து தகவல்தொடர்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசும்போது, 6G-க்கான தொழில்நுட்பத்துக்கான பணிகள் இந்தியாவில் தொடங்கிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR