Airtel vs Jio vs Vi vs BSNL : நாட்டில் ப்ரீபெய்ட் திட்டங்களைப் பற்றி பேசுகையில், ​​பெரும்பாலான மக்கள் மலிவான திட்டங்களை மட்டுமே தேடுகிறார்கள். அந்த வகையில் இன்று நாம் 300 ரூபாய்க்கும் குறைவான விலையில் வழங்கப்படும் தொலைத்தொடர்பு (ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா மற்றும் பிஎஸ்என்எல்) நிறுவனங்களின் திட்டங்களைப் பற்றி தான் காணப் போகிறோம். இந்தத் திட்டத்தில் நீங்கள் பல நன்மைகளைப் பெறுவீர்கள். மேலும் இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் அதிவேக டேட்டா, வரம்பற்ற அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் சேவை ஆகியவற்றின் நன்மைகளைப் பெறுவார்கள். இந்த திட்டத்தை பார்வையிடுவதன் மூலம் நீங்கள் உங்களின் வசதிக்கேற்ப நெட்வொர்க் பேக்கை தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜியோ ரூ 299 மாதாந்திர ரீசார்ஜ் திட்டம் | (Jio Rs 299 monthly recharge plan)
ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) ரூ.299 திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இந்த திட்டத்தில் 2ஜிபி, 4ஜி டேட்டா உங்களுக்கு வழங்கப்படும். ஜியோவின் இந்த திட்டத்தில், நாடு முழுவதும் உள்ள அனைத்து நெட்வொர்க்கிலும் வரம்பற்ற அழைப்புகளை மேற்கொள்ள முடியும். இதனுடன் நீங்கள் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் சேவையையும் பெறுவீர்கள்.


ஏர்டெல் ரூ.299 மாதாந்திர ரீசார்ஜ் திட்டம் | (Airtel Rs 299 monthly recharge plan)
ஏர்டெல் ப்ரீபெய்ட் (Airtel) .299 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால், வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்புகளை பெறுவீர்கள். அதனுடன் 28 நாட்கள் வேலிடிட்டியையும் நீங்கள் பெறுவீர்கள். அதனுடன் தினமும் 1.5ஜிபி 4ஜி டேட்டாவையும் இந்த திட்டத்தில் பெறுவீர்கள். இந்த திட்டத்தில், தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் வசதியையும் பெறுவீர்கள்.


மேலும் படிக்க | ரீசார்ஜ் பண்ண போறீங்களா? 100 ரூபாய்க்கும் குறைவான சிறந்த ரீசார்ஜ் பிளான்கள் இதுதான்


Vi ரூ 299 மாதாந்திர ரீசார்ஜ் திட்டம் | (Vi Rs 299 monthly recharge plan)
வோடபோன் ஐடியா (Vodafone Idea) அதன் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.299 மாதாந்திர ரீசார்ஜ் திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. ஏர்டெல்லைப் போலவே வோடபோன் ஐடியாவும் தினமும் 1.5ஜிபி 4ஜி டேட்டா சேவையை வழங்குகிறது. மேலும் நீங்கள் இலவச வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்புகளையும் மற்றும் தினம் 100 இலவச எஸ்எம்எஸ் சேவையையும் பெறுவீர்கள்.


BSNL ரூ.269 மாதாந்திர ரீசார்ஜ் திட்டம் | (Bharat Sanchar Nigam Limited - BSNL Rs 269 monthly recharge plan)
300 ரூபாய்க்குக் குறைவான ரீசார்ஜ் திட்டத்தில் ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவை ரூ.299க்கான திட்டத்தின் பலன்களை வழங்குகின்றன. ஆனால் பிஎஸ்என்எல் (Bharat Sanchar Nigam Limited - BSNL) நெட்வொர்க்கில் ரூ.269க்கு ரீசார்ஜ் திட்டம் உள்ளது. பிஎஸ்என்எல் மலிவான திட்டத்தை வழங்கினாலும், இந்த நெட்வொர்க்கை பயன்படுத்தும் மக்கள் தங்களின் புகாரை தொடர்ந்து அளித்து வருகின்றனர். எனினும் ரூ.269 திட்டத்தில் மக்கள் தினமும் 2 ஜிபி டேட்டாவை பெறுவார்கள். மேலும் இந்த திட்டம் 30 நாட்கள் செல்லுபடி காலத்துடன் வருகிறது. மேலும் வரம்பற்ற குரல் அழைப்புகளையும் வாடிக்கையாளர்கள் பெறுவார்கள்.


மேலும் படிக்க | Voter ID Transfer: ஆன்லைனில் திருமணதிற்கு பின் வாக்காளர் அட்டையை மாற்றுவது எப்படி?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ