ஜியோவின் அன்லிமிடெட் டேட்டா பிளான்! 1 வருடம் வேலிடிட்டி; ஆடிப்போய் இருக்கும் ஏர்டெல் - VI
ஜியோவின் இந்த சூப்பரான டேட்டா பிளானை நீங்கள் ரீச்சார்ஜ் செய்துவிட்டால், வருடம் முழுவதும் நீங்கள் கவலைப்படாமல் இருக்கலாம்.
கொரோனா காலத்திற்குப் பிறகு தினசரி ஒருவர் பயன்படுத்தும் சராசரி டேட்டா அதிகரித்திருக்கிறது. ஓடிடி, வீட்டில் இருந்து வேலை ஆகியவற்றுக்காக பலரும் அன்லிமிட்டெட் இண்டர்நெட் டேட்டா திட்டங்களை தேடிக் கொண்டிருக்கின்றன. அவர்களை டார்கெட் வைத்து ஜியோ உள்ளிட்ட டெலிகாம் நிறுவனங்கள் கவர்ச்சிகரமான பிளான்களை அள்ளி வீசிக் கொண்டிருகின்றன. அந்தவகையில் ஜியோவின் அன்லிமிடெட் டேட்டா பிளான் ஏர்டெல் மற்றும் வோடாஃபோன் ஐடியா நிறுவனத்துக்கு கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஒரே ஒருமுறை வாடிக்கையாளர்கள் இந்த திட்டத்தின் கீழ் ரீச்சார்ஜ் செய்துவிட்டால், வருடம் முழுவதும் இண்டர்நெட் டேட்டா பற்றி கவலைப்பபடாமல் இருக்கலாம். ஜியோவின் அந்த சூப்பரான டேட்டா பிளான் மற்றும் அதன் முழு விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | சத்தமில்லாமல் ஜியோ செய்த காரியம்... 12 ரீசார்ஜ் பிளான்கள் காலி - ஐபிஎல் தான் காரணமா?
ஜியோ டேட்டா பிளான்
ஜியோவின் அன்லிமிட்டெட் டேட்டா பிளானின் விலை ரூ. 2999. இந்த திட்டத்தின் விலை உங்களுக்கு அதிகமாக இருக்கலாம். ஆனால் இதில் நீங்கள் 365 நாட்கள் வேலிடிட்டியைப் பெறுவீர்கள். இப்போது அந்த பிளான் 388 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் உங்களுக்கு ஒரு நாளைக்கு 2.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இது 388 நாட்களையும் நீங்கள் கணக்கிட்டால் 912.5 ஜிபி டேட்டா உங்களுக்கு கிடைக்கும்.
ஜியோ பிளானின் நன்மைகள்
மற்ற நன்மைகளைப் பற்றி பேசுகையில், இந்த திட்டத்தில் அன்லிமிடெட் குரல் அழைப்புடன் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். வழங்கப்படுகின்றன. இது மட்டுமல்லாமல், இந்த திட்டத்தில், ஜியோ டிவியுடன், வாடிக்கையாளர்களுக்கு ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ கிளவுட் ஆகிய வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க | Loan App: இதை செய்தால் கடன் செயலிகளின் தொல்லை இருக்காது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ