சமீபத்திய ஆண்டுகளில், சட்டவிரோத டிஜிட்டல் கடன் செயலிகள் சம்பந்தப்பட்ட நிதி மோசடிகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.ஈஸியாக கடன் வழங்குகிறோம் என்று கூறி சில ஆவணங்களை மட்டுமே பெற்றுக் கொண்டு கடன் வழங்கும் மோசடி கடன் செயலி நிறுவனங்கள், அவர்களின் வலையில் வாடிக்கையாளர்களை விழ வைக்கின்றனர். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இத்தகைய ஆன்லைன் கடன் செயலிகளில் வட்டி மிக அதிகமாக இருக்கும். இதனை வாங்கும் பெரும்பாலானோரால் திருப்பிச் செலுத்த முடியவில்லை.
கடன் வாங்கியவர்கள் ஒரீரு தவணை தவறினால், கடன் வழங்கிய செயலியை நிறுவனத்தினர் மிரட்டலை அரம்பிக்கின்றனர். அடிக்கடி போன் செய்து தொல்லை கொடுப்பதுடன், தொடர்பில் இருக்கும் உறவினர்கள் உள்ளிட்டோரின் போன் நம்பருக்கு அழைப்பு விடுத்து மானபங்கம் செய்யவும் தவறுவதில்லை. அவர்களின் இத்தகைய நடவடிக்கையால் பலர் தற்கொலை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
இது இந்திய ரிசர்வ் வங்கியின் கவனத்துக்கும் சென்றுள்ளது. இதனைத் தொடர்ந்து இதுபோன்ற செயலிகள் செயல்பட அனுமதிக்கப்படும் அனைத்து சட்டப்பூர்வ ஆன்லைன் கடன் பயன்பாடுகளின் பாதுகாப்பான பட்டியலைத் தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளது. அதேநேரத்தில் வாடிக்கையாளர்கள் எப்பொழுதும் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்ததியுள்ளது. அதனால் நீங்கள் எந்த மோசடியான ஆன்லைன் நிதி தளத்திற்கும் இரையாகிவிடக்கூடாது.
மேலும் படிக்க | பான் கார்டு வைத்திருப்போர் கவனதிற்கு! இதை உடனடியாக செய்யுங்கள்!
எந்தவொரு கடன் செயலியை பயன்படுத்துவதற்கு முன், நிதி மோசடிக்கும் பலியாகாமல் இருக்க பின்வரும் வழிமுறைகளை கவனத்தில் வைத்து கொள்ளுங்கள்.
* சட்டவிரோத அப்ளிகேஷன்களை நீங்கள் நிறுவியவுடன், உங்கள் தனிப்பட்ட தரவுகளான தொடர்பு பட்டியல், புகைப்பட தொகுப்பு மற்றும் கேமரா போன்றவற்றிற்கான அணுகலை அவை கோருகின்றன. எனவே, உங்கள் தனிப்பட்ட தரவின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமையை சமரசம் செய்யக்கூடிய பயன்பாடுகளை எப்போதும் தவிர்க்கவும்.
* ஏதேனும் கடன் பயன்பாட்டின் நம்பகத்தன்மை குறித்து உங்களுக்கு சந்தேகம் இருந்தால், கடனைப் பெற எப்போதும் தெரிந்த வங்கி அல்லது நிதி நிறுவனத்திற்குச் செல்லவும். வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் (NBFCs) பட்டியலை RBI பராமரிக்கிறது, அதில் இருந்து நீங்கள் பாதுகாப்பாக கடனைப் பெறலாம்.
* இலாபகரமான சலுகைகளுடன் உடனடி கடன்களை உறுதியளிக்கும் மின்னஞ்சல்கள் மற்றும் செய்திகளுடன் இணைக்கப்பட்டுள்ள சந்தேகத்திற்கிடமான இணைப்புகளைக் கிளிக் செய்வதை தவிர்க்க வேண்டும்.
* இத்தகைய இணைப்புகள் பெரும்பாலும் தீங்கிழைக்கும் மற்றும் உங்கள் கணினியை வைரஸ்கள் அல்லது ஸ்பைவேர் மூலம் பாதிக்கலாம். அதையொட்டி தனிப்பட்ட தகவல்களைத் திருடலாம். உங்களை அச்சுறுத்த அல்லது மிரட்டுவதற்கு மோசடி செய்பவர்களால் தரவு பயன்படுத்தப்படலாம்.
* கூகுள் பிளேஸ்டோர் அல்லது ஆப் ஸ்டோர் (ஐபோன்களுக்கு) போன்ற நம்பகமான ஆதாரங்களில் இருந்து எந்த டிஜிட்டல் பயன்பாட்டையும் பதிவிறக்க வேண்டாம். எந்தவொரு நிதி பயன்பாட்டையும் பதிவிறக்கும் முன், எப்போதும் விவரங்களைச் சரிபார்த்து, பயனர்கள் பகிர்ந்துள்ள மதிப்புரைகளைப் பார்க்கவும்.
மேலும் படிக்க | mAadhaar பயன்படுத்த பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் தேவையா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ