ஜியோ-வை முந்தும் முனைப்பில் ஏர்டெல்!
ரிலையன்ஸ் ஜியோ தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் டெலிகாம் வாடிகையாளர்களை தன் கட்டுபாட்டில் வைத்துள்ள நிலையில் அதனை தகர்க்கும் முயற்சியில் ஏர்டெல் புதிய சலுகையை ஒன்றை அறிவித்துள்ளது.
அதன்படி, புதியதாக 4ஜி சிம்-னை பல சலுகைகளுடன் சேர்த்து 84 நாள் வேலிடிட்டியுடன் வழங்கவுள்ளது.
இந்த 4ஜி சிம்-ன் விலை ரூ.399 மற்றும் இதன் சலுகைகளாக
வாரத்திற்கு 1,000 நிமிடங்கள் வீதம் அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள்.
84 ஜிபி 4ஜி மொபைல் டேட்டா.
ஜியோ, வோடாபோன், ஐடியா போன்ற மற்ற நிறுவனங்களும் தங்கள் பங்கிற்கு சலுகைகளை அள்ளி தந்து கொண்டு இருக்கின்றன. இந்நிலையில் ஏர்டெல் -ன் இந்த ரூ.399 சலுகை மக்களிடையே வெற்றி பெறுமா என்பது கேள்விகுறியாகவே உள்ளது.