ரிலையன்ஸ் ஜியோ 2021-ல் இந்தியாவில் ரூ.6,499 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது, ​​இந்த போன் இந்தியாவில் ரூ.2,000 தள்ளுபடி விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. அதாவது ஸ்மார்ட்போன் வந்து ஒருவருடத்திற்குள்ளாக 2 ஆயிரம் ரூபாய் தள்ளுபடியில் 4,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், இதற்கு ஒரு கண்டிஷனை ஜியோ விதித்துள்ளது. 2000 ரூபாய் தள்ளுபடியை நீங்கள் பெற விரும்பினால் 4 ஜி ஸ்மார்ட்போன்கள் ஏதேனும் ஒன்றை நீங்கள் எக்ஸ்சேஞ்ச் செய்ய வேண்டும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜியோபோன் நெக்ஸ்ட் சலுகைகள்


ஜியோ நெக்ஸ்ட் போனை வாங்க விருப்பமுள்ளவர்களுக்கு பல்வேறு ஆப்சன்களையும் ஆஃபர்களையும் வழங்குகிறது. ஒரே தவணை முறையில் வாங்க முடியாதவர்கள் இ.எம்.ஐ முறையிலும் இந்த போனை நீங்கள் வாங்கிக் கொள்ளலாம். 24 மாதங்கள் வரை இஎம்ஐ சலுகை கொடுக்கப்படுகிறது. இதுதவிர ஜியோ நெக்ஸ்டு வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேக டேட்டா மற்றும் அழைப்பு சலுகைகளும் கொடுக்கப்படுகின்றன.  ஜியோவின் ஆல்வேஸ்-ஆன்-பிளான்கள் 24 மாதங்கள் மற்றும் 18 மாதங்கள் EMI விருப்பங்களில் முறையே ரூ.300 மற்றும் ரூ.350-க்கு கொடுக்கப்படுகிறது. இந்த திட்டங்களில் 5 ஜிபி மாதாந்திர டேட்டா, மாதத்திற்கு 100 நிமிடங்கள் அழைப்பு மற்றும் மாதத்திற்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை பெறலாம்.


மேலும் படிக்க | UPI Tips: யுபிஐ மூலம் ஏடிஎம்-லிருந்து பணம் எடுக்கலாம், கார்ட் கூட தேவையில்லை


பின்னர் 24 மாதங்கள் மற்றும் 18 மாதங்கள் EMI விருப்பங்களை ரூ.450 மற்றும் ரூ.500-க்கு வழங்கும் திட்டங்கள் உள்ளன. இந்த திட்டங்கள் தினசரி 1.5 ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் மாதத்திற்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வாடிக்கையாளர்கள் பெறலாம். இதேபோன்ற வேலிடிட்டியில் 500 மற்றும் ரூ.550-க்கான திட்டங்களும் உள்ளன. இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் மாதத்திற்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை பெறலாம். 550 மற்றும் 600 ரூபாய் திட்டத்தை தேர்ந்தெடுக்கும் போது வாடிக்கையாளர்கள், தினசரி 2.5 ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் மாதத்திற்கு 100 எஸ்எம்எஸ் பெறலாம்.


மேலும் படிக்க | இணைய வேகத்தில் வோடோஃபோன் - ஐடியா இனி கெத்துதான்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR