இணைய வேகத்தில் வோடோஃபோன் - ஐடியா இனி கெத்துதான்!

இணைய வேகத்தில் இனி வோடாஃபோன் ஐடியா கெத்து காட்டப்போகிறது. 

Written by - S.Karthikeyan | Last Updated : May 17, 2022, 10:07 AM IST
இணைய வேகத்தில் வோடோஃபோன் - ஐடியா இனி கெத்துதான்! title=

குறைந்த விலையில் டேட்டா மற்றும் வேலிடிட்டி கொடுக்கும் நிறுவனங்களை வாடிக்கையாளர்கள் தேடுவதுபோல், இணைய வேகத்தை கொடுக்கும் நிறுவனங்களையும் மக்கள் விரும்புகிறார்கள். அதிவேக இணையம் என்பது இன்றைய உலகில் தவிர்க்க முடியாததாகிவிட்டது. இதனை சரியாக புரிந்து கொண்டு இணைய வேகத்தையும், ரீச்சார்ஜ் பிளான்களையும் கொடுக்கும் நிறுவனங்களையே மக்கள் அதிகம் தேர்ந்தெடுக்கின்றனர். இதனால், டெலிகாம் துறையைப் பொறுத்தவரை அன்றாடம் கடும் போட்டி தான்.

ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடாஃபோன் ஐடியா ஆகிய மூன்று நிறுவனங்களும் இதனை மனதில் வைத்துக்கொண்டு சிறப்பான மற்றும் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்துக் கொண்டே இருக்கின்றன. வோடாஃபோன் ஐடியா நிறுவனம் இணைய வேகத்தை கூட்டும் வகையில் ஒரு சோதனை ஒன்றை அண்மையில் செய்துள்ளது. அந்த சோதனை அந்த நிறுவனத்துக்கு வெற்றியைக் கொடுத்திருப்பதால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறது. அது என்னவென்றால், 5 ஜி சோதனையில் 5.92 Gbps டவுன்லோட் வேகம் கிடைத்திருக்கிறது.

மேலும் படிக்க | IRCTC செயலியில் ரயில் டிக்கெட் முன்பதிவாகாது - காரணம் இதுதான்

வோடோஃபோன் ஐடியா நிறுவனம் நடத்திய சிங்கில் டெஸ்ட் டிவைஸ்-ல் இந்த வேகம் கிடைத்து உள்ளது. இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் அந்த நிறுவனம் இருக்கிறது. இதுகுறித்து வோடாஃபோன் ஐடியா வெளியிட்டுள்ள அறிவிப்பில், மகாராஷ்டிரா மாநிலம் பூனேவில்  5ஜி சோதனையை மேற்கொண்டதாக கூறியுள்ளது. எரிக்சன் மேசிவ் MIMO ரேடியோ, எரிக்சன் கிளவுட் நேட்டிவ் டூயல் மோட் 5ஜி கோர்,  மற்றும் NR-DC மென்பொருளில் மிட்-பேண்ட் மற்றும் ஹை-பேண்ட் 5ஜி டிரையல் ஸ்பெக்ட்ரத்தில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க  | இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பவர்களை மறைப்பது எப்படி?

சில மாதங்களுக்கு முன் வி நிறுவனம் 5ஜி சோதனையை குஜராத் பகுதியில் மேற்கொண்டது. நோக்கியாவுடன் இணைந்து இந்த சோதனையை வி நிறுவனம் மேற்கொண்டிருந்தது. இதன் மூலம் வணிக நெட்வொர்க்கில் 5ஜி சேவையை வெளியிடும் போது, வி நிறுவனம் லேடன்சி-சென்சிடிவ் மற்றும் வழக்கத்தை விட பெருமளவு இணைய சேவையை கோரும் தரவுகளான ஏ.ஆர்./வி.ஆர். மற்றும் 8K வீடியோ ஸ்டிரீமிங் உள்ளிட்டவைகளை மேற்கொள்ள முடியும். இது 5ஜி ஸ்டாண்ட்அலோன் NR-DC மென்பொருள் இருப்பதால் சாத்தியமாகும். 

நிறுவனங்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த பயன்பாடுகளை கொடுக்க முடியும். அரசு அறிவித்திருந்த ஸ்பெக்டரம் மூலம் இந்த சோதனையை நடத்தியதாகவும் வோடாஃபோன் ஐடியா கூறியுள்ளது. 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News