ரிலையன்ஸ் ஜியோ பல ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது. மலிவு விலையில் வாடிக்கையாளர்களை நோக்கில் பல திட்டங்களைக் கொண்டுள்ளது. இந்த திட்டங்கள் போட்டி நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் வோடாஃபோன் ஐடியா நிறுவனங்களுக்கு சவாலாக உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜியோபோன் ப்ரீபெய்ட் திட்டங்கள்


75 ரூபாய்க்கு இருக்கும் திட்டம் ஜியோவின் மிக குறைந்த விலை ப்ரீப்பெய்ட் பிளான் ஆகும். 23 நாட்கள் செல்லுபடியாகும். ஒரு நாளைக்கு 0.1 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டம் 2.3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இதுதவிர கூடுதலாக 200எம்பியையும் ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. மேலும், வாடிக்கையாளர்கள் மொத்தம் 50 எஸ்எம்எஸ்களையும் அனுப்பிக் கொள்ளலாம். அடுத்ததாக ரூ.91 திட்டம். 0.1GB நாளொன்றுக்கு பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக 200MB மற்றும் 50 SMS அனுப்பும் வாய்ப்பு கிடைக்கும். இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 28 நாட்கள்.


மேலும் படிக்க | ஐபிஎல் இலவசமாக பார்க்க ஜியோவின் எந்த பிளானை ரீச்சார்ஜ் செய்யலாம்?


ஜியோபோனின் ரூ.125 மற்றும் ரூ.152 திட்டம்


ஜியோபோன் வாடிக்கையாளர்களுக்காக ரூ.125 மற்றும் ரூ.152 திட்டங்கள் உள்ளன. ஒரு நாளைக்கு 0.5ஜிபி டேட்டாவையும், வேலிடிட்டி காலத்தில் மொத்தம் 300 எஸ்எம்எஸ்களையும் அனுப்பிக் கொள்ளலாம். ரூ.125 திட்டம் 23 நாட்கள் வேலிடிட்டி. மொத்தமாக 11.5GB டேட்டா பயன்படுத்திக் கொள்ளலாம். அதே நேரத்தில் ரூ.152 திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டி. இதில் 14GB மொத்த டேட்டாவை வழங்கப்படுகிறது.


ஜியோபோனின் ரூ.186 திட்டம்


ஜியோவின் ரூ.186 ப்ரீபெய்ட் திட்டத்தில், ஒரு நாளைக்கு 1ஜிபி டேட்டா கிடைக்கும். 28 நாட்கள் வேலிடிட்டி. மேலும். நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் அனுப்பிக் கொள்ளலாம். ஜியோ ரூ.222 விலையில் உள்ள ப்ரீபெய்ட் திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. நாளொன்றுக்கு 2GB டேட்டா என மொத்தம் 56 ஜிபி டேட்டாவை வாடிக்கையாளர்கள் உபயோகிக்கலாம்.


மேலும் படிக்க | அட்டகாசமான Poco 5G போன் வெறும் ரூ. 1249: அசத்தும் பிளிப்கார்ட்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR