ஜியோ சூப்பர் ஆபர்; குறைந்த விலையில் தினமும் 1 ஜிபி பெறுங்கள்
ரிலையன்ஸ் ஜியோ 200 ரூபாய்க்கும் குறைவான திட்டத்தில் தினமும் 1 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் காலிங் வசதியை வழங்குகிறது.
புதுடெல்லி: ரிலையன்ஸ் ஜியோ குறைந்த விலையில் அதிக சலுகைகளை வழங்குவதில் பெயர் பெற்றது. ஜியோ பல மலிவான திட்டங்களைக் கொண்டு வந்துள்ளது, இதில் அதிக டேட்டா மற்றும் அன்லிமிடெட் காலிங் போன்றவை கிடைக்கும்.
இன்று ரிலையன்ஸ் ஜியோ இன் ரூ.200-க்கும் குறைவான விலையில் கிடைக்கும் திட்டம் பற்றி காண உள்ளோம். இதில் தினமும் 1 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் காலிங் மற்றும் பல வசதிகள் கிடைக்கும். இதன் முழு விவரத்தை விரிவாக காண்போம்.
மேலும் படிக்க | பிரமாண்டமான டிஸ்பிளே கொண்ட இந்த 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.186 திட்டம்
ஜியோஃபோனின் ரூ.186 திட்டத்தில், பயனர் 28 நாட்கள் வேலிடிட்டியைப் பெறுவார்கள். மேலும், ரிலையன்ஸ் ஜியோ திட்டத்தில் தினமும் 1ஜிபி டேட்டா கிடைக்கும். அதாவது, திட்டத்தில் மொத்தம் 28 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அன்றைய தரவு முடிந்ததும், இணைய வேகம் @64 கேபிபிஎஸ் ஆக குறைகிறது. அதாவது தினசரி டேட்டா முடிந்த பிறகும் இணையம் கிடைக்கும்.
இலவச அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்
டேட்டாவைத் தவிர, ரூ.186 திட்டத்தில் பயனர் அன்லிமிடெட் காலிங் வசதியையும் பெறுகிறார். பயனர்கள் எந்த நெட்வொர்க்கிலும் இலவச அழைப்பு செய்யலாம். இதன் மூலம், பயனர் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் பெறுவார்கள். இது தவிர, ஜியோ மூவி, ஜியோ செக்யூரிட்டி, ஜியோ கிளவுட் ஆகியவற்றின் இலவச சந்தா திட்டத்தில் வழங்கப்படுகிறது.
மேலும் படிக்க | ஸ்மார்ட்போன் முதல் லேப்டாப் வரை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR