iPhone 12 Mini, iPhone 12 Max: எத்தனை inch? எப்போது launch? விவரம் உள்ளே......
iPhone 13 வரிசையின் சிறப்பு என்னவென்றால், அவை 120 ஹட் திறனுள்ள ப்ரமோஷன் டிஸ்பிளேவைக் கொண்டிருக்கும். இவற்றில் வேரியபிள் புதுப்பிப்பு விகிதங்கள் இருக்கும்.
அடுத்த ஆண்டு iPhone 13-ஐ கொண்டு வர Apple நிறுவனம் தயாராகி வருகிறது. இந்த தொலைபேசி பல விஷயங்களில் iPhone 12 போல இருக்கும். ஆனால் சில அம்சங்கள் இதில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். iPhone 13 வரிசையின் சிறப்பு என்னவென்றால், அவை 120 ஹட் திறனுள்ள ப்ரமோஷன் டிஸ்பிளேவைக் கொண்டிருக்கும். இவற்றில் வேரியபிள் புதுப்பிப்பு விகிதங்கள் இருக்கும். மேலும் இதில் குறைந்த வெப்பநிலை பாலிகிரிஸ்டலின் ஆக்சிட் (LTPO) காட்சி தொழில்நுட்பத்துடன் பொருத்தப்பட்டிருக்கும்.
டிஎஸ்சிசி நிறுவனர் மற்றும் காட்சி ஆய்வாளர் ரோஸ் யங் கருத்துப்படி, iPhone 13 அதன் முந்தைய மாடலான iPhone 12 ஐப் போலவே இருக்கும். ஏனென்றால் இவற்றிற்கும் iPhone 12 தொடரில் உள்ள அதே அளவுதான் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், 2021 ஆம் ஆண்டில் iPhone எஸ்இ மாடல் எதுவும் அறிமுகப்படுத்தப்படாது என்று Apple தெளிவுபடுத்தியுள்ளது.
ALSO READ: அசத்தலான 64MP கேமிராவுடன் வருகிறது Realme 7i ... அதுவும் அதிரடி விலையில்...!!!
இதற்கிடையில், Apple தனது iPhone 12 தொடரின் கீழ் 4 புதிய தொலைபேசிகளை அக்டோபரில் அறிமுகப்படுத்தவுள்ளது. அக்டோபர் 5 ஆம் தேதிக்குள் விநியோகஸ்தர்களிடம் iPhone 12-ன் முதல் லாட் இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. iPhone மினி கடைகளில் கிடைக்கும் முதல் iPhone 12 புதிய வகையாக இருக்கும். இதன் டிஸ்ப்பிளே அளவு 5.4 இன்ச்.
Apple-ன் ஆய்வாளரும் தொழில்நுட்ப ஆய்வாளருமான ஜான் ப்ராஸரின் கூற்றுப்படி, இந்த ஃபோன் தொகுப்புகளில், 64 ஜிபி / 128 ஜிபி / 256 ஜிபி மாறுபாட்டின் iPhone 12 மினி (iPhone 12 Mini) 5.4 மற்றும் 64 ஜிபி / 128 ஜிபி / 256 ஜிபி கொண்ட iPhone 12 6.1 ஆகியவை சேர்க்கப்படும்.
iPhone 12 குறித்து, ப்ராசர் ஏற்கனவே ட்வீட் செய்துள்ளார். அக்டோபர் 13 ஆம் தேதி இதற்கான நிகழ்வு நடைபெறும் என்று அவர் ட்வீட்டில் கூறினார். iPhone மினி தான் முதலில் கடைகளில் கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இது 5.4 inch அளவில் இருக்கும் என்றும் iPhone 12 மேக்ஸ் (iPhone 12 Max) 6.1 inch அளவில் இருக்கும் அவர் கூறினார்.
ALSO READ: உங்களுக்கு டெய்லரிங் தெரியுமா?... இதோ E-டெய்லர்களுக்கான 1 லட்சம் வேலை வாய்ப்பு...
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR