பேஸ்புக்கில் உங்களுக்கு பிடித்த வீடியோக்களை பதிவிறக்கம் செய்வது எப்படி..!!!
பேஸ்புக்கில் வரும் சில வீடியோக்கள் உங்களுக்கு மிகவும் பிடித்திருக்கும். அல்லது மிகவும் முக்கியமானதாக இருக்கலாம். ஆனால் அதை எவ்வாறு பதிவிறக்குவது என்பது பலருக்கும் தெரிவதில்லை.
புதுடெல்லி: பேஸ்புக்கில் (Facebook) நிறைய சுவாரஸ்யமான விஷயங்கள் மற்றும் வீடியோக்கள்பகிரப்படுகின்றன. இதுபோன்ற வேடிக்கையான வீடியோக்களை தொலைபேசியில் பதிவிறக்கம் செய்ய விரும்புகிறோம். பேஸ்புக்கில் நாம் காணும் வீடியோவை சேமிக்கும் ஆப்ஷன் இருந்தாலும், அந்த வீடியோக்களை தனியாக பதிவிறக்கம் செய்தால், வேறு சமூக ஊடகங்களிலும் அதனை பகிர்ந்து கொள்ளலாம்.
பேஸ்புக்கிலிருந்து (Facebook) வீடியோக்களைப் பதிவிறக்க பல செயலிகள் உள்ளன. ஆனால், அவ்வாறு செய்யும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், சில செயலிகள் மூலம் உங்கள் தொலைபேசியின் தரவுகள் திருடபடலாம் என்பதால், சரியான செயலியை தேர்ந்தெடுக்க வேண்டும். அண்ட்ராய்டு தொலைபேசி மற்றும் மடிக்கணினியில் பேஸ்புக் வீடியோக்களை எவ்வாறு பதிவிறக்கம் செய்யலாம் என்பதை பார்க்கலாம்
ALSO READ | ஸ்மார்ட்போன் தண்ணீரில் விழுந்து விட்டால், பதற வேண்டாம்; இதை செய்யுங்க..!!
பேஸ்புக் வீடியோவை பதிவிறக்குவது எப்படி
- நீங்கள் ஆண்ட்ராய்டு தொலைபேசியில் பேஸ்புக் இயக்குகிறீர்கள் என்றால், தொலைபேசியில் ஏதேனும் சுவாரஸ்யமான வீடியோவை பதிவிறக்கம் செய்ய விரும்பினால், முதலில் அந்த பேஸ்புக் வீடியோவை திறக்க வேண்டும்.
- இப்போது அங்கே அதன் இணைப்பை காப்பி செய்யவும்
- இப்போது நீங்கள் உங்கள் பிரவுசரில் (Browser) fbdown.net தளத்தை திறக்க வேண்டும்.
- வீடியோவின் இணைப்பை இங்கே பேஸ்ட் செய்யவும். இதற்குப் பிறகு உங்களுக்கு முன்னால் திறக்கும் அதில் பெயரை டைப் செய்து, பின்னர் எந்த கோப்பில் வீடியோவை சேமிக்க விரும்புகிறீர்கள் என்பதற்கான ஆப்ஷன் இருக்கும். அதனை தேர்வு செய்து சேமிக்கவும்.
- இந்த நடைமுறையைப் பின்பற்றுவதன் மூலம் நீங்கள் பேஸ்புக் வீடியோவை ஆண்ட்ராய்டு தொலைபேசியில் (Android Pnone) பதிவிறக்கம் செய்யலாம்.
ALSO READ | Amazon App quiz: அமேசானில் 10 ஆயிரம் ரூபாய் வெல்ல அரிய வாய்ப்பு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR