Tips & Tricks: போலி பான் கார்டை கண்டறிவது மிகவும் சுலபம்! எளிய வழிமுறைகள்

பான் கார்டு உண்மையானதா அல்லது போலியானதா தெரிந்துக் கொள்ள சுலபமான வழிமுறைகள்
இந்தியாவில் பான் கார்டு வைத்திருப்பது அவசியமான ஒன்று. அதிலும் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் அனைவரிடம் பான் அட்டை இருக்கும். ஆனால், தற்போது பான் கார்டு மோசடிகள் ஏராளமாக நடக்கின்றன.
அதிகரித்து வரும் போலி பான் கார்டுகளின் மோசடி வழக்குகளை கருத்தில் கொண்டு, வருமான வரித்துறை பான் கார்டில் க்யூஆர் (QR code) குறியீடுகளை வைக்கத் தொடங்கியுள்ளது.
பான் கார்டு
கடந்த சில ஆண்டுகளில், இந்தியா உட்பட உலகம் முழுவதும் டிஜிட்டல் மயமாக்கல் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், டிஜிட்டல் ஆவணங்கள் தொடர்பான மோசடியும் நாட்டில் அதிகரித்து வருகிறது.
பான் கார்டு என்பது நமது அன்றாட வாழ்வில் இன்றியமையாத ஆவணமாகும். அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களில் ஒவ்வொரு நிதி பரிவர்த்தனைக்கும் இது பயன்படுத்தப்படுகிறது.
மேலும் படிக்க | iPhone tips and tricks: ஐபோனை மீட்டமைக்கும் எளிய வழிமுறை
வங்கிகள், பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் போன்றவற்றில் பான் கார்டு பயன்படுத்தப்படுகிறது. வருமான வரி தாக்கல் செய்வதற்கும் பான் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
எனவே, பான் கார்டு உண்மையானதா அல்லது போலியானதா என தெரிந்துக் கொள்வது அவசியமாகிறது.
இதற்காக, QR குறியீடு தேவை. எனவே, QR குறியீட்டை ஸ்கேன் செய்ய வருமான வரித் துறையின் செயலியைப் பதிவிறக்கவும். அதன் பிறகு, உங்கள் மொபைல் ஸ்கேனர் மூலம் ஸ்கேன் செய்வதன் மூலம், பான் கார்டு உண்மையானதா இல்லையா என்பதை எளிதாகக் கண்டறியலாம்.
மேலும் படிக்க | அதிகளவில் விற்பனையாகும் 5ஜி போன்கள்
வருமான வரித்துறை இணையதளத்திற்குச் சென்று உங்கள் பான் கார்டைச் சரிபார்க்கலாம். எப்படி என்பதை தெரிந்துக் கொள்ளவும்.
படி 1: முதலில், www.incometax.gov.in/iec/foportal என்ற அதிகாரப்பூர்வ வருமான வரித் துறை இணையதளத்தில் கிளிக் செய்யவும்
படி 2: இப்போது உங்கள் PAN ஐ சரிபார்க்கவும் (Verify Your PAN) விருப்பத்தை கிளிக் செய்யவும்.
படி 3: அதைக் கிளிக் செய்தால், ஒரு புதிய பக்கம் திறக்கும்.
படி 4: இப்போது, உங்கள் மொபைல் எண், பிறந்த தேதி மற்றும் பான் கார்டு தகவல்கள் கேட்கப்படும்.
படி 5: இப்போது, வருமான வரித் தரவு உங்கள் தரவுகளுடன் பொருந்துகிறதா இல்லையா என்பதை நீங்கள் சரிபார்க்க வேண்டும்.
படி 6: இதற்குப் பிறகு, இந்த PAN உண்மையானதா அல்லது போலியானதா என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.
மேலும் படிக்க | முகக்கவசம் அணிந்திருக்கும் போது போனை அன்லாக் செய்வது எப்படி?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR