Tips and tricks: மின்னணு சாதனங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் சில குறிப்புகள்

ஸ்மார்ட்போன் மற்றும் பிற மின்னணு சாதனங்களை எவ்வாறு சுத்தம் செய்வது சுலபமானது...

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 18, 2022, 03:20 PM IST
Tips and tricks: மின்னணு சாதனங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் சில குறிப்புகள்  title=

உங்கள் ஸ்மார்ட்போன் மற்றும் பிற மின்னணு சாதனங்களை எவ்வாறு சுத்தம் செய்வது என்பதை தெரிந்துக் கொள்வது அநாவசிய செலவுகளை குறைப்பதில் உதவியாக இருக்கும்.

உங்கள் மின்னணு சாதனங்களைப் (Electronic items and Phones) பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் சில குறிப்புகள் இவை. மொபைல் போன் நமது கைகளில் எப்போதுமே இருக்கிறது. உண்ணும்போதும், படிக்கும்போதும், ஏன் உறங்கும்போதும் கூட மொபைல் போனை விட்டு பிரிவதில்லை. 

போன்கள் மட்டுமா? நமது ஸ்மார்ட்வாட்ச்கள், இயர்பட்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்ச்கள் உள்ளிட்ட அனைத்து மின்னணு சாதனங்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். இல்லையெனில் பண நஷ்டம் தான்.

மேலும் படிக்க | iPhone tips and tricks: ஐபோனை மீட்டமைக்கும் எளிய வழிமுறை

ஸ்மார்ட்போன்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க,  screen guard மற்றும் சிலிக்கான் அட்டையைப் பயன்படுத்தவும். இவை தற்செயலாக ஈரமானாலும் பாதுகாக்கும்.

ஸ்மார்ட்போன் மற்றும் இயர்பட்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்ச் போன்ற பிற மின்னணு சாதனங்களை சுத்தம் செய்வதற்கான எளிதான வழிகளில் ஒன்று மென்மையான கைக்குட்டை அல்லது காட்டன் பேட்களை லிக்யூட் ஹேண்ட் சானிடைசரில் வைத்து மொபைலில் உள்ள கறைகளை துடைப்பதுm ஆகும்.

கறைகள் கடுமையான இருந்தால் மட்டுமே ஆல்கஹால் வைத்து சுத்தப்படுத்த முயற்சிக்கவும்.

உங்கள் சாதனங்களில் உள்ள போர்ட்கள் மற்றும் வென்ட்களில் ஏற்பட்டுள்ள கறையை சுத்தம் செய்ய டேப்பைப் பயன்படுத்தவும். திரவ ஆல்கஹால் மற்றும் கைக்குட்டையைப் பயன்படுத்துவதன் மூலம் அதைத் தவிர்க்கவும். இது அனைத்து போர்ட்கள் மற்றும் திறப்புகளை முழுமையாக சுத்தம் செய்யும்.

மேலும் படிக்க | அதிகளவில் விற்பனையாகும் 5ஜி போன்கள்

உங்கள் ஸ்மார்ட்வாட்சை சுத்தம் செய்யும் போது, ​​ரப்பிங் ஆல்கஹாலையும், டயல் மற்றும் நைலான் பட்டையை சுத்தம் செய்ய மென்மையான துணியையும், மெட்டாலிக் ஸ்ட்ராப்பில் இருந்து கறைகளை அகற்ற சுத்தமான துணியையும் பயன்படுத்தலாம்.

உங்கள் தொலைபேசியில் தண்ணீரோ, பானமோ சிந்திவிட்டால், அதை அரிசி நிறைந்த பாத்திரத்தில் போட்டு வைக்கவும். அரிசி, போனில் உள்ள ஈரத்தை உறிஞ்சிவிடும். 
சீரான இடைவெளியில் அரிசியை மேலும் கீழுமாக களைந்துவிடவும்.

இதனால் அனைத்து திரவமும் சாதனத்தில் இருந்து வெளியேறும். ஷார்ட் சர்க்யூட்ட் ஏற்படும் என்பதால், போனை ஆன் செய்யாதீர்கள் மற்றும் ப்ளோ ட்ரையரை நேரடியாகப் பயன்படுத்த வேண்டாம்.

மேலும் படிக்க | முகக்கவசம் அணிந்திருக்கும் போது போனை அன்லாக் செய்வது எப்படி?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News