வீடியோ: பூமியை போலவே 8 கிரங்களை கொண்ட புதிய மண்டலம்!
நாசா நமது சூரிய மண்டலத்தைப் போலவே எட்டு கிரக அமைப்புகளை கொண்ட புதிய சூரிய மண்டலத்தை கண்டறிந்து உள்ளது.
நமது பூமியை போலவே எட்டு துனைகொல்களை கொண்ட புதிய சூரிய மண்டலம் ஒன்றை நாசா கண்டறிந்துள்ளது. இதுபற்றி, நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் சுற்று வட்டப்பாதைகள் கொண்ட இந்த நட்சத்திரம் கெப்லர் 90 என்று அழைக்கப்படுகிறது.
இது 2,545 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. நமது சூரிய குடும்பம் ஒரு நட்சத்திரத்தைச் சுற்றி பல கிரகங்கள் இணைக்கப்பட்டுள்ளது. எனினும், எந்த கிரகங்களிமும் உயிர்களுக்கு உரிய வாழ்வாதாரம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது என கூறி உள்ளது.
கெப்லர்-90 நட்சத்திர அமைப்பு நமது சூரிய மண்டலத்தின் ஒரு சிறிய பதிப்பாகும், என ஆஸ்டின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் வானியலாளர் ஆன்ட்ரூ வான்ட்பர்பர்க் கூறி உள்ளார்.நீங்கள் சிறிய கிரகங்கள் உள்ளே உள்ளன பெரிய கிரகங்கள் வெளியே உள்ளன. புதிதாக அறியப்பட்ட கிரகம் கெப்லர்-90, பூமியை போன்ற கிரகம் ஆகும். ஆனால் 14.4 நாட்களுக்கு ஒரு முறை அதன் நட்சத்திரத்தை சுற்றுகிறது. இதனுடைய ஒருவருடம் என்பது பூமியில் இரண்டு வாரங்கள்தான்.
நாசா இதன் சராசரி வெப்பநிலை சுமார் 426 டிகிரி செல்சியஸ் என கணக்கிட்டு உள்ளது. நாசாவின் கெப்லர் விண்வெளி தொலைநோக்கியில் இருந்து பெறப்பட்ட 35,000 சாத்தியமான கோள்களின் சமிக்ஞைகளின் அறிகுறிகளை கண்டுபிடிப்பதற்கு கணினி ஸ்கேன் செய்ய இந்த செயல்முறை உள்ளது.
கிரகங்கள் ஒரு நட்சத்திரத்திற்கு முன்னால் கடந்து செல்லும் போது ஒளி மாறுபடும். கெப்லர் விண்வெளி தொலைநோக்கி 2009 இல் தொடங்கப்பட்டது, மேலும் சுமார் 150,000 நட்சத்திரங்களை கண்டறிந்து உள்ளது.
கெப்லர் அனுப்பிய ஆவணங்களை பயன்படுத்தி சுமார் 2,500 தொலைவிலுள்ள உலகங்கள் இருப்பதை வானியல் நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர்.