மலிவான விலை - அதிக மைலேஜ் கொண்ட சிறந்த சிஎன்ஜி கார்கள் பட்டியல்
உங்களுக்கான சில நல்ல சலுகைகள் மற்றும் சிறந்த மைலேஜ் தரும் சிஎன்ஜி கார்கள் குறித்து பார்ப்போம்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் இந்தியாவில் சிஎன்ஜி கார்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. சிஎன்ஜி கார்கள் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. அதனால்தான் இப்போது பெரும்பாலானோர் சிஎன்ஜி கார் வாங்க நினைக்கிறார்கள். நீங்களும் பணத்தை மிச்சப்படுத்த CNG காரைப் பெற நினைக்கிறீர்கள் என்றால், உங்களுக்கான சில நல்ல சலுகைகள் மற்றும் சிறந்த மைலேஜ் தரும் சிஎன்ஜி கார்கள் குறித்து பார்ப்போம்.
மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon R)
மாருதி சுஸுகியின் வேகன் ஆர் கார் (Maruti Suzuki's Wagon R) அனைவரின் விருப்பமாக உள்ளது. இந்த கார் எந்த வயதினரும் ஓட்டுவதற்கு வசதியானதாக கருதப்படுகிறது. வேகன் ஆர், சிஎன்ஜி-கிட் மற்றும் 998என்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) பெட்ரோல் மோட்டாருடன் வருகிறது. இது மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் 32.52 கிமீ மைலேஜ் கிடைக்கும். தற்போது, வேகன் ஆர் சிஎன்ஜி (Wagon R CNG) எல்எக்ஸ்ஐ தேர்வு (Wagon R LXi) மற்றும் வேகன் ஆர் சிஎன்ஜி எல்எக்ஸ்ஐ (ஓ) மாடல்கள் மட்டுமே கிடைக்கிறது. இந்த காரின் விலை எக்ஸ்-ஷோரூம், 5.89 லட்சம் ரூபாய்.
ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் (Hyundai Grand i10 Nios)
சிஎன்ஜியில் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் ஒரு நல்ல தேர்வாக இருக்கும். அதன் அம்சங்களின் பட்டியலில் ரிவர்ஸ் கேமரா, ஏபிஎஸ், ஈபிடி, பின்புற ஏ/சி வென்ட்கள், முன் மற்றும் பின் பவர் ஜன்னல்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் ஆகியவை அடங்கும். மேலும் 1.2 எல் kappa பெட்ரோல் இயந்திரம் மற்றும் பரிமாற்றம் கொண்டது. எரிபொருள் தொட்டி capacity 60.0 kgs கொண்டது. மைலேஜ் மற்ற வாகனங்களை விட சற்று அதிகமாக 18.9 kmpl வரை தருகிறது. இதன் விலை ரூ.7.53 லட்சம்.
மாருதி எர்டிகா (Maruti Ertiga)
மாருதி சுசூகி இந்தியா நிறுவனம் எஸ்-சிஎன்ஜி வகைகளுடன் கூடிய பிஎஸ்6 விதிகளுக்கு உட்பட்ட எர்டிகா எம்பிவி கார்களை அறிமுகம் செய்துள்ளது. இதன் சிஎன்ஜி மைலேஜ் 26.08 kmpl ஆகும். இந்த காரின் சிஎன்ஜி வகையின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.9,66,500 லட்சம். மாருதி சுசூகி எர்டிகா பிஎஸ்6 எஸ்-சிஎன்ஜி வகைகள் ஒரே ஒரு ஆப்சனில் மட்டுமே கிடைக்கிறது.
ALSO READ | Best Selling Car: இந்தியாவில் சூப்பராக விற்பனையாகும் கார் இதுதான், உங்ககிட்ட இருக்கா?
மாருதி சுசுகி எஸ்-பிரஸ்ஸோ (Maruti Suzuki S-Presso)
Maruti Suzuki S-Presso ஒரு SUV வாகனம் போன்ற நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. இது இளைஞர்களைக் கவரும் என்பதில் உறுதியாக உள்ளது. மாருதியின் எஸ் சிஎன்ஜி பிஎஸ்6 மாடலில் 1.5 லிட்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 31.2 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என கூறப்படுகிறது. இந்த காரின் டேன்க் கொள்ளளவு 55 லிட்டர்கள் ஆகும். எக்ஸ்-ஷோரூம் படி இதன் விலை ரூ.5.37 லட்சம்.
மாருதி சுசுகி ஈகோ (Maruti Suzuki Eeco)
சிஎன்ஜி கார் வாங்க வேண்டும் என விருப்பம் இருந்தால், இதையும் பட்டியலிலும் செர்த்துக்கொள்ளலாம். இது 5 இருக்கை உள்ளமைவுடன் மட்டுமே கிடைக்கும். மலிவான கார்களின் பட்டியலில் மாருதியின் ஈகோ கார் வருகிறது. இந்த கார் 20.88 கிமீ/கிலோ மைலேஜ் தரும். மேலும் இதன் எக்ஸ்-ஷோரூம் படி இதன் விலை ரூ.5.6 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளது.
ALSO READ | Electric Vehicles: எலெக்ட்ரிக் கார்கள் எப்படி வேலை செய்கின்றன? இப்படித்தான்!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR