நெட்வொர்க் இல்லை என்றால் மொபைலில் எதுவும் செய்ய முடியாது. குறிப்பாக பிறரை அழைக்க முடியாது. இணையத்தையும் பயன்படுத்த முடியாது. மழைக்காலங்களில் இப்படியான சந்தர்ப்பங்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. மலைப் பிரதேசங்கள், கிராமப்புறங்களில் இதுபோன்ற நெட்வொர்க் பிரச்சனை அடிக்கடி வரும். இதுபோன்ற சமயங்களில் நீங்கள் பிறரை அழைக்க வேண்டி இருந்தால் அதற்கு சூப்பரான வழி இருக்கிறது. இதன் வழிமுறையை நீங்கள் பின்பற்றுவதன் மூலம் பிறரை அழைக்க முடியும். அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் இந்த அம்சம் இருக்கிறது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | பிளிப்கார்ட்டில் பாதி விலையில் விற்பனையாகும் iPhone 11 !


வைஃபை அழைப்பு 


மொபைல் நெட்வொர்க் இல்லாவிட்டாலும் வைஃபை அழைப்பு அம்சத்தின் உதவியுடன் யாரையும் எளிதாக அழைக்கலாம். இந்த அம்சத்தை உங்கள் மொபைலில் செயல்படுத்தி, நெட்வொர்க் இல்லாத சூழலில் பிறரை நீங்கள் அழைக்கலாம். நீங்கள் எந்த மூலையிலிருந்தாலும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் தொடர்பில் இருக்க முடியும். ஆனால் இதற்கு உங்களுக்கு வைஃபை நெட்வொர்க் வேண்டும்.


ஆண்ட்ராய்டு யூசர்கள்


நெட்வொர்க் இல்லை என்றால் ஆண்ட்ராய்டு பயனர்கள் கவலைப்பட தேவையில்லை. முதலில் உங்கள் தொலைபேசி செட்டிங்குகளுக்குச் செல்லவும். ஃபோன் அமைப்புகளில் சிம் & நெட்வொர்க் விருப்பம் இருக்கும். இதிலிருந்து சிம் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். இதை கிளிக் செய்வதன் மூலம் வைஃபை அழைப்பு விருப்பத்தைக் காண்பீர்கள். இந்த அம்சத்தை இயக்குவதன் மூலம், நெட்வொர்க் இல்லாமல் தொலைபேசியை இணைக்க முடியும்.


மேலும் படிக்க | ’ரத்தன் டாடா ஆசீர்வாதம்’ ஆன்லைன் டீசல் விற்பனையில் அசத்தும் தம்பதி


ஐபோன் யூசர்கள்


ஆண்ட்ராய்டு பயனர்களைப் போலவே, ஐபோன் யூசர்களும் எந்த நெட்வொர்க்கும் இல்லாமல் நாட்டின் எந்த மூலையிலிருந்தும் தொலைபேசி அழைப்புகளைச் செய்யலாம். ஐபோன் யூசர்கள் செட்டிங்ஸ் ஆப்சனை தேர்ந்தெடுத்து வைஃபை அழைப்பு ஆப்சனை தேர்ந்தெடுக்க வேண்டும். இதனை நீங்கள் ஆன் செய்த பிறகு வைஃபை மூலம் நீங்கள் பிறரை அழைக்கலாம். 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ