மாருதி கார்களுக்கான தள்ளுபடிகள் ஜூலை 2022: மாருதி சுசுகி இந்த மாதம் (ஜூலை 2022) அதன் அரேனா ரேஞ்ச் மாடல்களில் ரூ.25,000 வரை தள்ளுபடி வழங்குகிறது. சலுகைகளில் ரொக்க தள்ளுபடி, பரிமாற்ற போனஸ் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடி ஆகியவை அடங்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த சலுகைகள் நிறுவனத்தின் ஆல்டோ, செலிரியோ, ஸ்விஃப்ட், வேகன் ஆர் மற்றும் எஸ்-பிரஸ்ஸோ ஹேட்ச்பேக்குகளில் கிடைக்கும். இருப்பினும், சிஎன்ஜி வகைக்கு எந்த தள்ளுபடியும் வழங்கப்படவில்லை. மேலும், எர்டிகா ஃபேஸ்லிஃப்ட் எம்பிவி-க்கு எந்த தள்ளுபடியும் இல்லை. 


மறுபுறம், சலுகைகளுடன் கூடிய மாடல்களைப் பற்றி பேசினால், வெவ்வேறு மாடல்களில் வெவ்வேறு சலுகைகள் அளிக்கப்படுகின்றன. மாருதி சுசுகி செலெரியோ மற்றும் மாருதி சுசுகி வேகன் ஆர் ஆகியவற்றில் ரூ.25,000 வரை சலுகைகள் உள்ளன. 


செலிரியோ பல வகைகளில் கிடைக்கிறது. அனைத்திலும் 1.0 லிட்டர் கெ10சி (67எஹ்பி) பெட்ரோல் எஞ்சின் உள்ளது. வேகன் ஆர் - 1.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் கே12சி டூயல்ஜெட் பெட்ரோல் எஞ்சினில் இரண்டு இன்ஜின் ஆப்ஷன்கள் கிடைக்கும்.


மேலும் படிக்க | Maruti Brezza: முன்பதிவில் அமோக வரவேற்பு - 45,000 பேர் புக்கிங் 


இவை தவிர, மாருதி சுஸுகி ஸ்விஃப்டில் ரூ.18,000 வரை சலுகைகள் கிடைக்கின்றன. ஸ்விஃப்ட் அதன் சிக்கனமான இயந்திரம், ரைட் மற்றும் கையாளுதல் சமநிலைக்கு பெயர் பெற்றது. இதில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் (90எச்பி) கிடைக்கிறது. இது 5-ஸ்பீடு மேனுவல் அல்லது AMT கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. மாருதி சுசுகி ஆல்டோ 800க்கு ரூ.23,000 வரை சலுகைகள் கிடைக்கும். ஆல்டோ 796சிசி இன்ஜினுடன் மட்டுமே வருகிறது.


மாருதி சுசுகி ஈக்கோ-வில் ரூ.20,000 வரையிலான சலுகைகள் கிடைக்கின்றன. மாருதி சுஸுகியின் மலிவு விலை எம்பிவி ஈகோ-வில் 1.2-லிட்டர் எஞ்சின் (73hp, 98Nm) யூனிட் கிடைக்கிறது. இதில் 5-சீட்டர், 7-சீட்டர் மற்றும் கார்கோ வகைகள் கிடைக்கின்றன. மேலும் இந்த அனைத்து வகைகளிலும் ரூ.20,000 வரை தள்ளுபடி சலுகை உள்ளது. 


இது தவிர, மாருதி சுஸுகி டிசையர் மீது ரூ.15,000 வரை சலுகைகள் கிடைக்கின்றன. இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் காம்பாக்ட் செடான் கார் இதுவாகும். இது மாருதி ஸ்விஃப்ட் அடிப்படையிலான செடான் ஆகும்


மாருதி சுசுகி எஸ்-பிரஸ்ஸோவில் ரூ.20,000 வரை சேமிக்கலாம். எஸ்-பிரஸ்ஸோவின் பலம் அதன் எஸ்யூவி போன்ற வடிவமைப்பாகும். இது 1.0 லிட்டர் எஞ்சின் (68எச்பி) கொண்டுள்ளது. எஸ்-பிரஸ்ஸோவின் அனைத்து வகைகளிலும் ரூ.20,000 வரையிலான நன்மைகள் கிடைக்கும். எந்தவொரு காரின் சிஎன்ஜி வகைகளிலும் சலுகைகள் இல்லை என்பதை இங்கு மீண்டும் ஒருமுறை தெளிபடுத்துகிறோம்.


(குறிப்பு- நகரம் மற்றும் டீலரைப் பொறுத்து சலுகைகள் மாறும். எனவே, வாங்கும் முன் டீலரிடம் பேசி இவற்றை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.)


மேலும் படிக்க | MG4 EV: ஒருமுறை சார்ஜ் செய்தால் 452 கிமீ ஓடும்: மைலேஜ் 160 கிமீ 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR