New Alto K10: புதிய Alto K10 விரைவில் அறிமுகம்: விலை என்ன
Maruti Suzuki Alto: மாருதி நிறுவனம் ஆல்டோவின் இரண்டு புதிய மாடல்களை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது... Alto K10 காரின் மேம்படுத்தப்பட்ட பதிப்பும் அதில் ஒன்று...
புதுடெல்லி: நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி சுஸுகி, அதன் தொடக்கத்தில் இருந்தே நுழைவு நிலை ஹேட்ச்பேக் பிரிவில் கவனம் செலுத்தி வருகிறது. தற்போது எஸ்யூவிகளுக்கான தேவை அதிகரித்துள்ள போதிலும், மாருதி இன்னும் இந்த பிரிவில் கார்களை தயாரித்து வருகிறது.
தகவல்களின்படி, மார்ச் 2020 இல் உற்பத்தி நிறுத்தப்பட்ட Alto K10 காரை அறிமுகப்படுத்த மாருதி முடிவு செய்துள்ளது. வரவிருக்கும் இந்த காருக்கு Y0M என்ற குறியீட்டு பெயர் வழங்கப்பட்டுள்ளது.
கடுமையான போட்டியின் காரணமாக இந்த பிரிவில் நல்ல ஸ்கோப் இருக்கும் என்று மாருதி சுஸுகி நிறுவனம் நம்புகிறது. தற்போது, மாருதியின் எஸ்-பிரஸ்ஸோ மற்றும் ரெனால்ட் க்விட் ஆகிய கார்களுக்கு தேவை அதிகமாக உள்ளதால், நிறுவனம் புதிய Alto K10 மற்றும் புதிய தலைமுறை Alto 800 ஆகியவற்றை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.
மேலும் படிக்க | ரோல்ஸ் ராய்ஸ் முதல் ஆடி கார் என ஆடம்பர கார் பிரியர் ஜஸ்டின் பீபரின் கார்கள்
இந்தியாவில் மாருதி சுஸுகி ஆல்ட்டோவுக்கான தேவை
இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்களில் மாருதி சுஸுகி ஆல்ட்டோவும் ஒன்று. இது கிட்டத்தட்ட 20 ஆண்டுகளில் 4.3 மில்லியன் கார்களை விற்பனை செய்துள்ளது.
2000 ஆம் ஆண்டு உற்பத்தி தொடங்கப்பட்டதற்குப் பிறகு, ஆல்டோவின் முதல் தலைமுறை கார்கள் 2012 வரை தயாரிக்கப்பட்டன. அந்த காலகட்டத்தில் 1.8 மில்லியன் கார்கள் விற்பனையாகின.
இதனுடன், 2010 இல் ஆல்டோ கே10 அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் சக்திவாய்ந்த 998-சிசி இன்ஜின் கொடுக்கப்பட்டிருந்தது. மார்ச் 2020 இல் இந்த காரின் உற்பத்தி நிறுத்தப்படும் வரை 8,80,000 கார்கள் விற்கப்பட்டன.
அக்டோபர் 2012 இல், இரண்டாம் தலைமுறை ஆல்டோ கார்கள், ஆல்டோ 800 என்ற புதிய பெயருடன் அறிமுகப்படுத்தப்பட்டது. இது மாருதி 800க்கு மாற்றாக இருந்த நிலையில், இதுவரை 1.63 மில்லியன் கார்களுக்கு மேல் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | பாதி விலையில் Maruti Ciaz கார் வாங்க ஓர் அறிய வாய்ப்பு
ஆல்டோ 800 இன் 3 வகைகள் நிறுத்தப்பட்டன
புதிய தலைமுறை ஆல்டோ 800 மற்றும் புதிய ஆல்டோ கே10 அறிமுகத்திற்கு முன்னதாக, மாருதி சுசுகி தற்போதுள்ள ஆல்டோ 800 ஹேட்ச்பேக்கின் 3 வகைகளை நிறுத்தியுள்ளது. கைவிடப்பட்ட 3 வகைகளான Std, LXi மற்றும் LXi CNG ஆகியவை மிகவும் குறைவான விலையில் விற்கப்பட்டன. இப்போது அந்த கார்களை Std (O), LXi (O), LXi (O) CNG, VXi மற்றும் VXi+ வகைகளில் வாங்கலாம்.
2022 ஆல்ட்டோ மாடலின் புதிய மாற்றங்கள்
2022 ஆல்டோ தற்போதைய ஆல்ட்டோவை விட சற்று அதிக பிரீமியம் கொண்டதாகவும் பெரிய காராகவும் இருக்கும். இது 6 ஏர்பேக்குகளுடன் பாதுகாப்பு தரத்தின்படி தயாரிக்கப்படும். பெரியதாக இருப்பதால், உள்ளே அதிக இடவசதி இருக்கும், மேலும் பல புதிய அம்சங்களும் இதில் கிடைக்கும். காரின் வடிவமைப்பும் எஸ்யூவி போன்ற தோற்றத்தை அளிக்கும் வகையில் மேம்படுத்தப்படும்.
மேலும் படிக்க | அடுத்த 5 மாதங்களுக்கு இலவச ரேஷன் வேண்டுமானால் இத பண்ணுங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR