ஐபோன் 14 சலுகைகள்: ஐபோன் 14 256 ஜிபி (iPhone 14 256 GB) ஐபோன் பிரியர்களை அதிக அளவில் கவர்ந்துள்ள ஒரு மாடல் ஆகும். எனினும் இதன் அதிகப்படியான விலை காரணமாக பயனர்கள் இதை வாங்க தயக்கம் காட்டுவதுண்டு. ஆனால், இனி இப்படிப்பட்ட பயனர்களுக்கு ஒரு முக்கிய மற்றும் மகிழ்ச்சிகரமான செய்தி வந்துள்ளது. ஐபோன் 14 256 ஜிபி மிட்நைட் எடிஷனை வாங்க வாடிக்கையாளர்கள் இனி அதிக செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் இதில் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய தள்ளுபடி கிடைக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால், இந்த தள்ளுபடி சலுகை குறித்து யாருக்கும் அதிக தகவலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சலுகையின் கீழ், வாடிக்கையாளர்களுக்கு பெரும் சேமிப்பை அளிக்கும் அளவுக்கு வலிமையான இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் 33 ஆயிரம் முழுத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த தள்ளுபடி சலுகையை நீங்களும் பயன்படுத்திக் கொள்ள விரும்பினால், இந்த ஸ்மார்ட்போனில் கிடைக்கும் தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் பற்றி விரிவாக இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். இந்த சலுகையை பயன்படுத்திக்கொண்டால் பயனர்கள் அதிக அளவு தொகையை சேமிக்க முடியும். 


இந்த தள்ளுபடி சலுகை எங்கே கிடைக்கும்?


இந்த அசத்தலான தள்ளுபடி சலுகை ஆன்லைன் விற்பனைத் தளமான பிளிப்கார்ட்டில் வழங்கப்படுகிறது. இந்தச் சலுகையின் மூலம் பயனர்கள்பெரிய அளவில் சேமிக்க முடியும். ஐபோன் 14 256 ஜிபி (iPhone 14 256 GB) மிட்நைட் மாடலின் உண்மையான விலை பிளிப்கார்ட்டில் இல் 81,999 ரூபாயாக உள்ளது. உண்மையை சொல்ல வேண்டுமானால், அனைவராலும் அதிக பட்ஜெட்டாக தோன்றும் இவ்வளவு அதிக விலை கொடுத்து இந்த போனை வாங்க முடியாது. இந்த ஐபோனின் அசல் விலையில் 9 சதவீத தள்ளுபடிக்குப் பிறகு இந்த விலை வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதன் பிறகும் இந்த ஸ்மார்ட்போன் பலரது பட்ஜெட்டுக்குள் பொருந்தாது. 


ஆனால், இப்போது அதிக விலை காரமாக இந்த ஐபோனை வாங்க தயக்கம் காட்டும் பயனர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. இந்த ஐபோனின் விலை குறையும் வரை இனி பயனர்கள் காத்திருக்கத் தேவையில்லை. ஏனெனில் அதில் மற்றொரு சலுகை கிடைக்கின்றது. உங்கள் பணத்தை அதிக அளவில் மிச்சப்படுத்தும் வகையில் இது இருக்கும். 


மேலும் படிக்க | ஏர்டெல்லின் அசத்தல் ரீசார்ஜ் திட்டம்! இலவசமாக ஓடிடிகளை பார்க்கலாம்!


பரிமாற்றச் சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்


ஐபோன் 14 256 ஜிபி மிட்நைட் மாறுபாட்டிற்கு வாடிக்கையாளர்கள் ரூ. 81,999 செலுத்த வேண்டும். இருப்பினும் நீங்கள் எக்ஸ்சேஞ்ச் சலுகையைப் பயன்படுத்தவில்லை என்றால்தான் இந்த விலையை செலுத்த வேண்டும். இந்த போனை வாங்கினால், பிளிப்கார்ட்டில் ரூ. 33,000 மதிப்பிலான எக்ஸ்சேஞ்ச் சலுகை அதாவது பரிமாற்ற சலுகை அளிக்கப்படுகின்றது. இது முழுமையாக செயல்படுத்தப்பட்டால் இந்த அசத்தல் ஐபோனை வெறும் ரூ. 48,999 -க்கு வாங்க முடியும். 


இருப்பினும், வாடிக்கையாளர்கள் இந்த சலுகையை பயன்படுத்திக்கொள்ள, அவர்கள் மாற்றிக்கொள்ளும் பழைய போன் நல்ல நிலையில் இருப்பதையும், லேட்டஸ்ட் மாடலாக இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். அப்போது மட்டுமே இந்த சலுகையின் முழுமையான பலனை அவர்களால் அனுபவிக்க முடியும். 


கூடுதல் தகவல்:


வரும் வாரங்களில் அறிமுகம் ஆகவுள்ள போன்களின் பட்டியல் இதோ


டிப்ஸ்டர் டெபயன் ராய், வரவிருக்கும் ஸ்மார்ட்போன்களின் பட்டியலை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். Realme 11 Pro, Realme 11 Pro+, Galaxy F54, OnePlus Nord, iQOO Neo 7 Pro, Infinix Note 30 series மற்றும் Oppo Reno 10 தொடர்கள் ஜூன் மாதத்தில் அறிமுகப்படுத்தப்படலாம் ena டிப்ஸ்டரின் கூறியுள்ளார். இருப்பினும், Oppo தொடர் பற்றி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. அதாவது, இது ஜூலை மாதத்திலும் அறிமுகம் ஆகலாம், அல்லது தாமதமும் ஆகலாம். 


மேலும் படிக்க | ஸ்மார்ட் டிவிக்காக நீங்கள் 20-25 ஆயிரம் செலவழிக்க வேண்டியதில்லை..! ஜஸ்ட் ரூ.9,000 போதும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ