ஏர்டெல்லின் அசத்தல் ரீசார்ஜ் திட்டம்! இலவசமாக ஓடிடிகளை பார்க்கலாம்!

நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களுள் ஒன்றான பார்தி ஏர்டெல் நிறுவனம் ரூ.499 மதிப்புள்ள போஸ்ட்பெய்டு திட்டத்தின் மூலம் ஓடிடி நன்மைகளையும் வழங்குகிறது.  

Written by - RK Spark | Last Updated : May 30, 2023, 08:15 AM IST
  • ஏர்டெல்லின் ரூ.499 போஸ்ட்பெய்டு திட்டத்தில் அமேசான் பிரைம் தொகுப்பும் வழங்கப்படுகிறது.
  • ரூ.399 போஸ்ட்பெய்டு திட்டத்தில் ஓடிடி நன்மைகள் வழங்கப்படவில்லை.
  • இந்தத் திட்டத்தில் ஆக்டிவேஷன் கட்டணமும் சேர்க்கப்பட்டுள்ளது.
ஏர்டெல்லின் அசத்தல் ரீசார்ஜ் திட்டம்! இலவசமாக ஓடிடிகளை பார்க்கலாம்! title=

நாட்டில் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களுள் ஒன்றான பார்தி ஏர்டெல் நிறுவனம் இப்போது அதன் போஸ்ட்பெய்டு சலுகைகளில் அதிக கவனம் செலுத்த விரும்புகிறது.  ஏர்டெல் நெட்வொர்க் தனது வாடிக்கையாளர்களுக்கு பலவிதமான சலுகைகளை வழங்கி வருகின்றது.  உலகம் முன்னெப்போதையும் விட அதிகமாக இணைக்கப்பட்டுள்ளதால், போஸ்ட்பெய்டு பிரிவில் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது.  ப்ரீபெய்டு திட்டத்தை விட போஸ்ட்பெய்டு திட்டத்தை பெரும்பான்மையான மக்கள் விரும்புகின்றனர்.  ப்ரீபெய்டு திட்டத்தில் நாம் குறிப்பிட்ட வரம்பில் மட்டும் தான்டேட்டா போன்ற பல நன்மைகளை பயன்படுத்த முடியும், ஆனால் போஸ்ட்பெய்டு திட்டத்தில் நீங்கள் பயன்படுத்தும் அளவை பற்றி கவலைப்பட வேண்டிய தேவையில்லை, நீங்கள் எந்தளவிற்கு பயன்படுத்தி இருக்கிறீர்களோ அதற்கேற்ப பில் வரும் அதனை செலுத்தினால் மட்டுமே போதும்.  ப்ரீபெய்டு திட்டத்தில் இருப்பதை போல பயன்படுத்தும்போதே பயந்துகொண்டு இருக்கவேண்டிய திட்டம் போஸ்ட்பெய்டு திட்டத்தில் கிடையாது.  பார்தி ஏர்டெல்லின் நுழைவு-நிலை போஸ்ட்பெய்ட் திட்டம் ரூ.399க்கு வருகிறது.  இருப்பினும், இது கூடுதல் ஓடிடி (ஓவர்-தி-டாப்) நன்மைகளுடன் வரவில்லை.  தற்போது ஏர்டெல் நிறுவனம் ரூ.499 மதிப்புள்ள போஸ்ட்பெய்டு திட்டத்தின் மூலம் ஓடிடி நன்மைகளையும் வழங்குகிறது.

மேலும் படிக்க | Chat GPT: AI செயலிகள் மூலம் அரங்கேற்றப்படும் மோசடிகள்..! மக்களே உஷார்!

பார்தி ஏர்டெல்லின் ரூ.499 போஸ்ட்பெய்ட் திட்டத்தில் 75 ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் காலிங் வழங்கப்படுகிறது, இந்த திட்டத்துடன் கூடுதலாக பயனர்களுக்கு அமேசான் பிரைம் தொகுப்பும் வழங்கப்படுகிறது.  ஆனால் அமேசான் பிரைம் ஆறு மாதங்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது, அதுவே டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவின் தொகுப்பு ஒரு வருடத்திற்கு வழங்கப்படுகிறது.  மொபைல் பாதுகாப்பு, எக்ஸ்ஸ்ட்ரீம் மொபைல் பேக் மற்றும் விங்க் மியூசிக் பிரீமியம் போன்ற கூடுதல் நன்மைகளும் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது.  ஏர்டெல்லின் இந்த திட்டம் குடும்ப திட்டம் அல்ல என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.  

இருப்பினும், இந்த திட்டத்தில் ஆட்-ஆன் இணைப்புகளை நீங்கள் விரும்பினால், அவை ஒவ்வொன்றிற்கும் நீங்கள் ரூ.299 செலுத்த வேண்டும்.  ஆட்-ஆன் இணைப்புகள் ஒவ்வொன்றிலும், 30ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவை கிடைக்கும்.  இந்தத் திட்டத்தில் ஆக்டிவேஷன் கட்டணமும் சேர்க்கப்பட்டுள்ளது.  சில மாநிலங்களில், ஆக்டிவேஷன் கட்டணம் ரூ. 300 மற்றும் சில மாநிலங்களில் ஆக்டிவேஷன் கட்டணம் ரூ. 250 ஆக இருக்கும்.  இது புதிய இணைப்பை வாங்கும் போது செலுத்த வேண்டிய ஒரு முறை கட்டணமாக இருக்கும்.  பாதுகாப்பு டெபாசிட்டின் கீழ் செயல்படுத்தப்பட்ட போஸ்ட்பெய்ட் திட்டங்களுக்கு ஏர்டெல் பிளாக் பேண்ட்லிங் பொருந்தாது.  மேலும் ஏர்டெல் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு ரூ.479 விலையில் 56 நாட்களுக்கு செல்லுபடியாகும் ரீசார்ஜ் திட்டத்தினை வழங்குகிறது.  இது வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் அழைப்பு மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் வசதியை வழங்குகிறது.  இது தவிர, இந்த திட்டம் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது.  இது தவிர, விண்க் மியோசிக் மற்றும் இலவச ஹெலோ டியூன் போன்ற பயன்பாடுகளின் இலவச சந்தாகளையும் வழங்குகிறது.  ஏர்டெல் 5ஜி நெட்வொர்க்கானது 3,000க்கும் மேற்பட்ட இந்திய நகரங்களில் கிடைக்கிறது.

மேலும் படிக்க | பொய் பேசினால் கண்டுபிடிக்கும் கருவி..! இனி யாரும் தப்ப முடியாது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News